பிரயாக்ராஜ்: பெண்கள் திருமண வயதை 18 இருந்து 21 ஆக மாற்றும் மசோதா தாக்கலை காங்., சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன என பிரதமர் மோடி உ.பி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் பிரதமர் மோடி விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த பிரம்மாண்ட விழாவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய பிரதமர் 'மத்திய பாஜ., அரசு பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான சட்ட மாற்றம் ஆகும். கல்வி பயிலும் பெண்களுக்கு திருமணம் குறித்த சுயமாக முடிவெடுக்க இந்த வயது வரம்பு அதிகரிப்பு உதவும்' என்றார்.
ஆனால் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய சமாஜ்வாடி கட்சி சேர்ந்த இரண்டு எம்பிகள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் முன்னேற்றத்திற்கான மசோதாவை எதிர்ப்பதால் மேற்கண்ட இந்த கட்சிகள் பிற்போக்குத்தனமான கொள்கைகளை கொண்டவை என்று பாஜக விமர்சித்து இருந்தது. ஆனால் இதுகுறித்து தெரிவித்த அகிலேஷ் தாங்கள் பிற்போக்கான கொள்கை கொண்டவர்கள் அல்ல என்றார்.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளின் கோட்டையாக விளங்கும் பிரயாக்ராஜ் பகுதியைக் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது பிரதமர் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்கனவே வன்முறை வெறியாட்டங்கள் பல நடப்பதாக முன்னதாக பிரியங்கா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவது அவசியமற்றது என்கிற ரீதியில் அவர் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE