இதே நாளில் அன்று
டிச., 22, 1887
ஈரோடில், 1887, டிசம்பர் 22ல் பிறந்தவர், சீனிவாச ராமானுஜன். இளம் வயதிலேயே, யாருடைய உதவியும் இன்றி, கணித அறிவில் மிளிர்ந்தார். இந்திய கணித கழகத்தின் ஆய்வு பத்திரிகையில், இவரின் முதல் ஆய்வுக் கட்டுரை வெளியானது. சென்னை பல்கலையில், ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார்.
சென்னை துறைமுகத்தில், குமாஸ்தா பணியாற்றியவர், தன் கணித ஆர்வம் குறித்து, லண்டனைச் சேர்ந்த பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு கடிதம் எழுதினார். அவரின் அழைப்பை ஏற்று, 1914ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு சென்றார்.கடந்த, 1914 - 1918 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 3,000க்கும் அதிகமான கணித தேற்றங்களை கண்டுபிடித்தார். 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரை, 'ராயல் சொசைட்டி' உறுப்பினராக தேர்ந்தெடுத்து, இங்கிலாந்து பெருமைப்படுத்தியது. கேம்பிரிட்ஜ் பல்கலையின், 'பெல்லோஷிப்' பதவியும் அவருக்கு கிட்டியது. 1920 ஏப்ரல் 26ம் தேதி, தன், 33வது வயதில் காலமானார்.
கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE