இது உங்கள் இடம்: மோசடி செய்த தமிழக அரசு அதிகாரிகள் 8 பேருக்கும் தண்டனை கிடைக்குமா?

Updated : டிச 22, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (38) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: ஆர்.கணேசன், சென்னை, அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் மோசடி செய்த தமிழக அரசு அதிகாரிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு, 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் லோக்சபாவில்
PM KISAN, farmers, Narendra Singh Tomar, Agriculture Minister


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ஆர்.கணேசன், சென்னை, அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் மோசடி செய்த தமிழக அரசு அதிகாரிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு, 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

மோசடியில் ஈடுபட்ட தமிழக அரசு அதிகாரிகள் கைதானதும், 182 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததும் பெரிய விஷயமே இல்லை. அந்த அதிகாரிகள், திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், உண்மையான தண்டனையை, அவர்கள் அனுபவித்து இருப்பர். அங்கு, அவர்களுக்கு உரிய 'சிகிச்சை' மேற்கொள்ளப்பட்டு இருக்கும். ஆனால் அந்த மோசடி அதிகாரிகள், சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் கட்டில், மெத்தை, வீட்டுச் சாப்பாடு, மொபைல்போன் என, சகல வசதியுடன் ஓய்வெடுத்து கொண்டிருப்பர்.


latest tamil news


அரசு பணத்தில் முறைகேடு செய்து, விவசாயிகளின் நலத்திட்டத்தில், 'ஆட்டை'யைப் போட்டோர் அல்லவா? அவர்களை நன்கு கவுரவிக்காமல் விட்டால் நன்றாக இருக்குமா? தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவோர் மீது ஒரு புதுவிதமான தண்டனை முறையை கடைப்பிடிக்க துவங்கி உள்ளனர். லஞ்சம் மற்றும் ஊழல் செய்து சிக்கிக் கொள்பவர், முதற்கண் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அடுத்து ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு மறுவாழ்வும், பதவி உயர்வும் கொடுத்து, அழகு பார்ப்பார்.

வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணை, தண்டனை என எதுவும் அவர்களுக்கு கிடையாது. கழகங்களின் ஆட்சியில் இது போன்று நடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஊழல் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டால் தான், ஆச்சரியம் மற்றும் அதிசயம்! இதே நிலைமை நீடித்தால், லஞ்சம் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு, விருது வழங்கி கவுரவிப்பரோ என்னவோ? மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் ஒரே ஒரு கேள்வி தான்... மத்திய அரசின் விவசாயிகளுக்கான நலத்திட்டத்தில் மோசடி செய்துள்ள தமிழக அரசு அதிகாரிகள் எட்டு பேருக்கும் தண்டனை கிடைக்குமா?

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-டிச-202122:52:33 IST Report Abuse
Natarajan Ramanathan ஒவ்வொரு வருடமும் மிக அதிக அளவு லஞ்சம் வாங்கி பிடிபடுபவர்களுக்கு அண்ணாவின் திவசம் கொண்டாடும் பிப்ரவரி 3 அன்று அண்ணா விருது கொடுத்து கௌரவிக்கலாம். முதலில் இந்த ஆண்டுக்கான விருது வேலூர் ஷோபனாவுக்கு 03.02.2022 கொடுத்து தொடங்கலாம். அதையும் நம்ம அணில் அமைச்சர் கரங்களால் கொடுக்கலாம்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-டிச-202117:05:20 IST Report Abuse
DVRR மடியல் அரசுக்கு ஒழுங்கா கமிஷன் போயிடிச்சின்னா அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை ???சரிதானே மடியல் அரசே??
Rate this:
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
22-டிச-202116:52:29 IST Report Abuse
Nancy ஆறாம் வகுப்பு வரை படித்த எங்க வூரு தலையேறி எட்டு கோடி ரூபாய்க்கு வீடு கட்டிருக்கன் - வருமான வரி துறை என்ன செய்து
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-டிச-202120:01:28 IST Report Abuse
Dhurveshஒருத்தன் தேர்தல் என்று சொல்லி கொடுத்த 4 கோடியில் வீடு கட்டிவிட்டான் அப்புறம் என்ன அவனை யார் கேட்பது...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
22-டிச-202120:14:41 IST Report Abuse
Barakat Aliமுதலில் தமிழைக் கொலை செய்வதை நிறுத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X