அரசு ஊழியர்களுக்கு 4 நாள் வேலை: அடுத்த நிதியாண்டு முதல் அமல்?

Updated : டிச 23, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி : அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை, அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தாண்டு துவக்கத்தில், 'தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கான மசோதாவை தயாரிக்கும் பணியில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தீவிரமாக
India, new labour codes, 4 day work

புதுடில்லி : அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை, அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தாண்டு துவக்கத்தில், 'தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கான மசோதாவை தயாரிக்கும் பணியில் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா பற்றி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது தொழில் நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு, எட்டு மணி நேரம் வீதம், வாரத்தில் ஆறு நாட்களுக்கு 48 மணி நேரம், பணி நேரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாக உள்ளன.


latest tamil news


ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதியை மாற்றம் செய்ய அரசு விரும்பவில்லை. எனினும் ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

மீதமிருக்கும் மூன்று நாட்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை, தொழிலாளர்களின் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் அனைவராலும், 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது. இவற்றை உள்ளடக்கி, தொழிலாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதாவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அடுத்த மாதத்தில் மசோதா தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டான 2022- 23ல், ஏப்ரல் 1ம் தேதி முதல், இதை அமல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanasundaram Linga Moorthi - Accra,கானா
29-டிச-202115:01:33 IST Report Abuse
Kalyanasundaram Linga Moorthi GM Wish everyone a blessed Happy 2022 New Year Already they don't work in normal 5 days / 40 hours a week. 95% of the people don't work particularly reservations, anything you ask the reservations immediately going on strike and / or threatening. Going to 48 hours / 4 days a week, will become worst i.e. 2 hours late in the morning / close from work 2 hours before the closure time - reason traffic, no transport etc / morning, evening 2 hours for coffee & tea // 2 hours for lunch // 1 hour for moving the files & 1 hour non-sense talks where they are moving files and / or within the department. Where is the time to complete their job on their unless bribes
Rate this:
Cancel
Dr SS - Chennai,இந்தியா
27-டிச-202121:00:03 IST Report Abuse
Dr SS களப்பணியானர்களுக்கும் பொருந் தூம என்றால் பொருந்தாது. வீட்டுப்பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு அலுவலகம் வாய்ப்பாக இருக்கும் நிலை மாறிவிடும். மீதமுள்ள மூன்று நாட்களில் அவை அதிகமாக வாய்ப்பு உண்டு
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
27-டிச-202116:04:39 IST Report Abuse
raghavan இரண்டு மணி நேரம் தாமதமாக வருவது, இரண்டு மணி நேரம் அரட்டை, இரண்டு மணி நேரம் டீ கடை, இரண்டு மணி நேரம் மதிய உணவு, ஒரு மணி நேரம் பாத்ரூம், டாய்லெட், மிச்ச சொச்ச நேரம் ஒப்புக்கு ஒரு வேலை செஞ்சுட்டா வாரத்துக்கு மூணு நாளுக்கு ஓய்வு. லஞ்சமே லட்சியம் என்று வாழ்பவர்களுக்கு இது பொருந்தாது வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய அவர்கள் தயார்.
Rate this:
Hari - chennai,இந்தியா
29-டிச-202110:25:56 IST Report Abuse
Hariஇனிமேல் பொதுமக்களுக்கு தேவையான அரசு சார்ந்த வேலைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் உதாரணம் எ தி எம் பேங்க் கார்டு ,அரசின் ஒப்பந்தம்,பிறப்பு இறப்பு,பட்டா ,சிட்டா ரெஜிஸ்ட்ரசன் ,கம்பிளைன்ட் டிக்கெட் புக்கிங் ,மற்றும் கேன்சல் என எல்லாம் ஆன்லைனில் கொண்டுவந்துவிட்டால் மீதம் இருக்கும் வேலைக்கு எதுக்கு பல லட்சம் சம்பளம் கொடுத்து ஊழியர்களை அரசு நியமிக்கணும் பொதுமக்கள் ஆகிய நாம லஞ்சம் கொடுத்து பொலம்பவேண்டாமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X