புதுடில்லி: ரஷ்யா வழங்கும் 'எஸ் - 400' ஏவுகணை தடுப்பு இயந்திரத்தை அடுத்த இரு வாரங்களில் பஞ்சாப் எல்லையில் நிறுவ, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து, 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஐந்து எஸ் - 400 ஏவுகணை தடுப்பு இயந்திரங்களை வாங்க, ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி முதல் இயந்திரத்திற்கான பாகங்கள் ரஷ்யாவில் இருந்து வரத் துவங்கியுள்ளன.அவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் வந்தடையும்.
இந்த பாகங்கள் ஒருங்கிணைந்து உருவாகும், முதல் எஸ் - 400 இயந்திரம், பஞ்சாப் எல்லையில் நிறுவப்படும். ரஷ்யாவில் பயிற்சி பெற்ற இந்திய விமானப் படையினர், எஸ்-400 இயந்திரத்தை இயக்குவர். சீனா, பாக்., ஆகிய நாடுகளின் வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் உள்ள இந்த இயந்திரத்தில் நான்கு ஏவுகணைகள் அடங்கிஉள்ளன.
அவை, 400 கி.மீ.,250 கி.மீ., 120 கி.மீ.,40 கி.மீ., என, நான்கு நிலைகளில் வரும் எதிரி விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 'இதன் வாயிலாக, தெற்காசிய வான் பரப்பின் பாதுகாப்பு மேலும் பலம் பெறும்' என, விமானப்படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE