முன்னாள் முதல்வர் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு; பா.ஜ., நிர்வாகி அறிவிப்பு

Updated : டிச 22, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
பாட்னா: “பீஹார் மாநில முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி நிறுவன தலைவருமான ஜிதன் ராம் மஞ்சியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,” என, அகில உலக ஹிந்து மஹா சபா பொதுச் செயலரும் பீஹார் மாநில பா.ஜ., செயற்குழு உறுப்பினருமான கஜேந்திர ஜா அறிவித்துள்ளார்.கண்ணியம் இல்லைபீஹார் மாநில முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி
Jitan Ram Manjhi, Rs 11L reward, BJP leader

பாட்னா: “பீஹார் மாநில முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி நிறுவன தலைவருமான ஜிதன் ராம் மஞ்சியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,” என, அகில உலக ஹிந்து மஹா சபா பொதுச் செயலரும் பீஹார் மாநில பா.ஜ., செயற்குழு உறுப்பினருமான கஜேந்திர ஜா அறிவித்துள்ளார்.



கண்ணியம் இல்லை


பீஹார் மாநில முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி நிறுவன தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி, சமீபத்தில் நடந்த தலித் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர் பிராமண சமூகத்தினரை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, உலக ஹிந்து மஹா சபா பொதுச்செயலரும் பீஹார் மாநில பா.ஜ., செயற்குழு உறுப்பினருமான கஜேந்திரா ஜா வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஜிதன் ராம் மஞ்சி மீண்டும் மீண்டும் பிராமணர்களுக்கு எதிராக பேசி வருகிறார். அவரது பேச்சை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவருக்கு கண்ணியமும் இல்லை; இந்து மதத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. அவரது நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன். மேலும், அவரது வாழ்நாள் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news





மன்னிப்பு


ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான், “மாஞ்சியின் நாக்கை அறுக்க யாருக்கு தைரியம் இருக்கிறது. ''பா.ஜ., தலைமை அதன் தலைவர்களை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ''தன் பேச்சுக்கு மஞ்சி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுள்ளார்,” என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-டிச-202116:18:42 IST Report Abuse
அப்புசாமி Please don't repeat the same comment
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
22-டிச-202113:01:30 IST Report Abuse
Suppan எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு அறிவுரை. பேச்சை ஆரம்பிக்கு முன்பே இப்படி ஒரு அறிவிப்பைச் செய்து விடுங்கள். "என்னுடைய பேச்சினால் யாருடைய மனதும் புண்படாது. அப்படி புண்பட்டால் அது சகிப்புத் தன்மையில்லாத அவர்களுடைய தவறாகத்தான் இருக்கும். இனிமேல் இப்படிப் பேசமாட்டேன் என்று உறுதி கொடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் நான் வருந்துகிறேன்".
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
22-டிச-202112:39:35 IST Report Abuse
ஜெயந்தன் அப்படி பார்த்தால் ...பிஜேபியில் பாதி பயலுக நாக்கே இல்லாமதான் அலைவானுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X