ஒப்பந்ததாரர் பதிவு புதுப்பிப்பு; அவகாசம் 3 ஆண்டாக நீட்டிப்பு

Updated : டிச 22, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தங்களின் பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என, அரசு அறிவித்துள்ளது. ஐந்து நிலைகளில் பதிவுபொதுப்பணித்துறை வாயிலாக, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இப்பணிகளை மேற்கொள்ள மாநிலம் முழுதும் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள் ஐந்து


சென்னை : பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தங்களின் பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என, அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



ஐந்து நிலைகளில் பதிவுபொதுப்பணித்துறை வாயிலாக, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இப்பணிகளை மேற்கொள்ள மாநிலம் முழுதும் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள் ஐந்து நிலைகளில் பதிவு செய்யப்படுகின்றனர்.

முதல் நிலை ஒப்பந்ததாரர்கள் 75 லட்சம் ரூபாய்க்கு மேல்; இரண்டாம் நிலை ஒப்பந்ததாரர்கள் 75 லட்சம் ரூபாய்க்கு கீழ் வரை பணிகளை மேற்கொள்ள முடியும். மூன்றாம் நிலை ஒப்பந்ததாரர்கள் 30 லட்சம் ரூபாய்க்கு கீழ்; நான்காம் நிலை ஒப்பந்ததாரர்கள் 15 லட்சம் ரூபாய் வரை; ஐந்தாம் நிலை ஒப்பந்ததாரர்கள் 6 லட்சம் ரூபாய் வரையும் பணிகளை மேற்கொள்ள முடியும்.


latest tamil news



அ.தி.மு.க., ஆட்சியில் பல பணிகள் பேக்கேஜ் முறையில், பல லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டன.இதனால், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே ஆதாயம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, ஒப்பந்ததாரர் பதிவை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டதால், பலரும் பாதிக்கப்பட்டனர்.

50 லட்சம் ரூபாய் வரை

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், 'ஒப்பந்ததாரர் பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம்.அந்தந்த மண்டல தலைமை அலுவலகத்திலேயே, புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்' என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, முதல் நிலை ஒப்பந்ததாரர்கள் இனி 10 கோடி ரூபாய்க்கு மேலும்; இரண்டாம் நிலை ஒப்பந்ததாரர்கள் 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையும்; மூன்றாம் நிலை ஒப்பந்ததாரர்கள், 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரையும். நான்காம் நிலை ஒப்பந்ததாரர்கள் 50 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையும்; ஐந்தாம் நிலை ஒப்பந்ததாரர்கள் 50லட்சம் ரூபாய் வரையும் பணிகளை மேற்கொள்ள முடியும். இதற்கான உத்தரவை, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா பிறப்பித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
22-டிச-202113:59:56 IST Report Abuse
raja அப்புறம் உடன் பிறப்புகள் ஒப்பந்தம் வெறும் லட்சங்களிலா? இப்போ பாருங்க விடியல் வந்துடுச்சே உடன்பிறப்பு ஒப்பந்த காரர்களுக்கு... மூணு வருசத்துக்கு ஒவ்வரு நிலை உடன்பிறப்புக்கும் கோடிகளில் ஒப்பந்தத்தை புள்ளிகள்... இனி அள்ளலாம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X