நாம் தமிழர் கட்சியினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல்; வீடியோ வைரல்

Updated : டிச 22, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (56)
Advertisement
தர்மபுரி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தி.மு.க.,வை செருப்பைக் காட்டி விமர்சித்த நிலையில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் செவ்வாயன்று (டிச., 21) கூட்டம் போட்ட அக்கட்சியினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.சீமானின் நாம் தமிழர் கட்சி பா.ஜ.,வின் கொள்கைகளுடன் செயல்படுவதாக தி.மு.க., விமர்சித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு
DMK, NTK, Fight, திமுக, நாம் தமிழர் கட்சி,

தர்மபுரி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தி.மு.க.,வை செருப்பைக் காட்டி விமர்சித்த நிலையில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் செவ்வாயன்று (டிச., 21) கூட்டம் போட்ட அக்கட்சியினர் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

சீமானின் நாம் தமிழர் கட்சி பா.ஜ.,வின் கொள்கைகளுடன் செயல்படுவதாக தி.மு.க., விமர்சித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.,வினரை செருப்பால் அடிப்பேன் என சீமான் மேடை நாகரீகமின்றி செருப்பை தூக்கிக் காட்டினார். இச்செயல் தி.மு.க., நிர்வாகிகளை கொந்தளிக்கச் செய்தது. சமூக ஊடகங்களில் சீமானை ஆபாசமாக திட்டித் தீர்த்தனர். மேலும் இனி எங்கெல்லாம் சீமான் கூட்டம் போடுகிறாரோ அங்கெல்லாம் செருப்பு வீசப்படும் என சிலர் பதிவிட்டனர்.


தர்மபுரி, மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனிமவள கொள்ளையை கண்டித்து பேச்சாளர் ஹிம்லர் பேசினார். திமுகவை துரோகி என்று ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தபோது, திமுக பிரமுகர் ஒருவர் மேடையில் ஏறி, அவதூறாக பேசாதே எனக்கூறி வாக்குவாதம் செய்தார். சிலர் தடுக்க முயன்றதால், கைகலப்பு ஏற்பட்டது. மைக் ஸ்டாண்டை தூக்கி ஏறியப்பட்டது. கீழ் இருந்த சிலர் நாற்காலிகளை மேடையை நோக்கி தூக்கிவீசினர். திமுகவினரை போலீசார் தடுத்து அழைத்து சென்றனர். பேச்சாளரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். கூட்டம் பாதியில் நின்றது. இது தொடர்பாக நாம்தமிழர் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.#DMKvsNTK #SeemanPartyAttack #Dharmapuri #NaamTamizharKatchi

latest tamil news



இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதி, மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் செவ்வாயன்று (டிச., 21) முஸ்லிம் கைதிகள் மற்றும் ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளிகளான 7 பேரை விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். இவர் ஏற்கனவே குமரியில் கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எதிர்கட்சியினரை கல்லாலேயே போட்டுவிடுவோம், சம்பவமாகிவிடும் என்று பேசியிருந்தார்.

இந்தப் பின்னணியில் ஹிம்லர் என்பவர் தர்மபுரி மொரப்பூரில் பேசிக்கொண்டிருந்த போது தி.மு.க., நிர்வாகி ஒருவர் மேடையேறி, மரியாதையாகப் பேச வேண்டும் என கூறியபடி அடிக்கப் பாய்ந்தார். அவர் மேடையிலிருந்து இறங்கி தப்பித்தார். கீழே இருந்த மற்றொரு தி.மு.க., நிர்வாகி நாற்காலிகளை மேடையிலிருந்தவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினார். இதனால் பலரும் பயந்து கீழிறங்கி தப்பிச் சென்றனர். உடனடியாக போலீசார் வந்து தி.மு.க., நிர்வாகிகளை தடுத்து அழைத்துச் சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
27-டிச-202114:15:06 IST Report Abuse
pradeesh parthasarathy Please don't repeat the same comment
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
22-டிச-202118:36:28 IST Report Abuse
Anand தடியை எடுத்தவன் தடியால் தான் சாவான் என்பது போல, எப்படியோ இரண்டு ரவுடி கூட்டமும் அடிச்சுக்கிட்டு அழிந்தால் சரி..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-டிச-202118:23:07 IST Report Abuse
Bhaskaran Periya ravudi thimuka kutti ravudi seemaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X