சென்னை: நடிகர் விஜயின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையிட்டு வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்தவரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ திரைப்படங்களில் முதலீடு தவிர மற்ற சில தொழில்களும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இன்று (டிச.,22) வருமான வரித்துறை அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சேவியர் பிரிட்டோவின் வீடு மட்டுமல்லாமல், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
சீன செல்போன் நிறுவனங்கள்
வரி ஏய்ப்பு செய்வதாக வந்த
தகவல்களை அடுத்து,
நாடு முழுவதும் OPPO, ஷாவ்மி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர்
சோதனை நடத்தினர்.
சென்னையில் 10 இடங்கள் உட்பட
தமிழகம் முழுவதும் 30 இடங்களில்
சோதனை நடத்தப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே
சுங்குவார்சத்திரத்தில் உள்ள
ஃபாக்ஸ்கான் செல்போன் தயாரிப்பு
நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இங்குதான், ஆப்பிள், ரெட்மி செல்போன்களின்
முக்கிய பாகங்கள் தயாராகிறது.
சென்னை ஓஎம்ஆர் சாலை
கொட்டிவாக்கத்தில் உள்ள
ஓப்போ நிறுவன தலைமை அலுவலகத்தில்
வருமான வரித்துறையினர்
2வது நாளாக சோதனை நடத்தினர்.
சீன நிறுவனமான சியோமி, ஓப்போ நிறுவனங்களுக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக செல்போன் நிறுவனத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் கையாளுவதால் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement