மதுரையில் கட்டடம் இடிந்து காவலர் பலி; ரூ.25 லட்சம் நிவாரணம்

Added : டிச 22, 2021 | கருத்துகள் (5)
Advertisement
மதுரை: மதுரையில் விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் சரவணன், கண்ணன் ஆகிய இரு போலீசாரும் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். இன்று (டிச.,22) அதிகாலை கீழவெளி வீதியில் உள்ள கடை முன்பு நின்றிருந்தபோது, அந்த இடத்தின் அருகே இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான சுமார் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே
மதுரையில் கட்டடம் இடிந்து காவலர் பலி; ரூ.25 லட்சம் நிவாரணம்

மதுரை: மதுரையில் விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் சரவணன், கண்ணன் ஆகிய இரு போலீசாரும் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். இன்று (டிச.,22) அதிகாலை கீழவெளி வீதியில் உள்ள கடை முன்பு நின்றிருந்தபோது, அந்த இடத்தின் அருகே இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான சுமார் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார், காவலர் கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



முதல்வர் நிவாரணம்

உயிரிழந்த காவலர் சரவணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.



மதுரை, விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் இருவரும், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். கீழவெளி வீதி, நெல்பேட்டையில் ஒரு பழமையான கட்டடம் முன்பு காவலர்கள் இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கட்டடத்தின் மேல் தளத்தின் சுவர் திடீரென இடிந்து இருவர் மீதும் விழுந்தது. இதில், சரவணன் இறந்தார். கண்ணன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaihind - Chennai,இந்தியா
22-டிச-202119:02:17 IST Report Abuse
Jaihind இந்த அரசு இந்த கட்டிட உரிமையாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது, ஏனேன்றால் சிறுபான்மையினர் இதுவே ஒரு இந்துவின் கட்டிடமாக இருந்தால் இந்நேரம் அவர்கள் குடும்பமே ஜெயிலில் இருக்கும், எல்லாம் நம் தலைஎழுத்து
Rate this:
Cancel
NRajasekar - chennai ,இந்தியா
22-டிச-202112:34:35 IST Report Abuse
NRajasekar பாவம் சரவணன் என்ற பேர் இவ்வளவு தான் வேறு பேராக இருந்திருந்தால் ஒரு. கோடி வரை கிடைத்திற்கும். இன்னும. பல. பல
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
22-டிச-202112:27:42 IST Report Abuse
N Annamalai சோகமான சம்பவம் .ஆழ்ந்த இரங்கல்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X