மதுரையில் கட்டடம் இடிந்து காவலர் பலி; ரூ.25 லட்சம் நிவாரணம்| Dinamalar

மதுரையில் கட்டடம் இடிந்து காவலர் பலி; ரூ.25 லட்சம் நிவாரணம்

Added : டிச 22, 2021 | கருத்துகள் (5) | |
மதுரை: மதுரையில் விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் சரவணன், கண்ணன் ஆகிய இரு போலீசாரும் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். இன்று (டிச.,22) அதிகாலை கீழவெளி வீதியில் உள்ள கடை முன்பு நின்றிருந்தபோது, அந்த இடத்தின் அருகே இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான சுமார் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே
மதுரையில் கட்டடம் இடிந்து காவலர் பலி; ரூ.25 லட்சம் நிவாரணம்

மதுரை: மதுரையில் விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் சரவணன், கண்ணன் ஆகிய இரு போலீசாரும் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். இன்று (டிச.,22) அதிகாலை கீழவெளி வீதியில் உள்ள கடை முன்பு நின்றிருந்தபோது, அந்த இடத்தின் அருகே இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான சுமார் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார், காவலர் கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


முதல்வர் நிவாரணம்

உயிரிழந்த காவலர் சரவணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த காவலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X