புதுச்சேரிக்குள் நுழைந்ததா ஒமைக்ரான்: முதல்வர் அறிவித்ததாக வைரலாகும் போலி வீடியோ

Updated : டிச 22, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (2)
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை அதிகாரி பெயரில் ஏற்கனவே போலி அறிவிப்பு வெளியானது. தற்போது புதுச்சேரியில் மூன்று பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதால், பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை என, முதல்வர் ரங்கசாமி அறிவித்ததாக போலி வீடியோ பரவி வருகிறது.புதுச்சேரியில் சமூக வலைத்தளத்தில், போலியான பதிவு, அரசு உத்தரவு களை திரித்து வெளியிடும் போக்கு அதிகரித்து

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை அதிகாரி பெயரில் ஏற்கனவே போலி அறிவிப்பு வெளியானது. தற்போது புதுச்சேரியில் மூன்று பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதால், பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை என, முதல்வர் ரங்கசாமி அறிவித்ததாக போலி வீடியோ பரவி வருகிறது.



latest tamil news




புதுச்சேரியில் சமூக வலைத்தளத்தில், போலியான பதிவு, அரசு உத்தரவு களை திரித்து வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 14ம் தேதி, 'சுனாமி' காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அதிகாரி பெயரில் போலி உத்தரவு தயாரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

இந்நிலையில், நேற்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. அதில் தொலைக்காட்சி ஒன்றில் முதல்வர் ரங்கசாமி பேட்டி அளிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதில், 'புதுச்சேரியில் மூன்று பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும்' என்று, முதல்வர் ரங்கசாமி அறிவித்ததாக இடம்பெற்று இருந்தது.


latest tamil news




இதனால் புதுச்சேரியில் பரபரப்பு தொற்றி கொண்டது. 'ஒமைக்ரான் புதுச்சேரிக்குள் நுழைந்து விட்டதா... அதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா... என விசாரித்து, பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை, சட்டசபை அதிகாரிகளுக்கு போன்கள் பறந்தது.விசாரணையில், அது, போலியான வீடியோ என தெரியவந்தது.

ஏற்கனவே பள்ளி கல்வித்துறை பெயரில் போலி உத்தரவு தயாரித்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.இந்த தைரியத்தில், முதல்வர் பெயரில், போலியான அறிவிப்பு வீடியோ வெளியிட்டு பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
22-டிச-202115:44:03 IST Report Abuse
sankaseshan நாறவாய் நாராயணசாமி தான் போலி வீடியோ வேலையே செய்திருப்பான்
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
22-டிச-202114:31:39 IST Report Abuse
மணி ஒருவேளை பிஜேபி நுழைந்ததை இப்படியாக கிண்டல் செய்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X