இந்தியாவில் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது: நிபுணர்கள் கருத்து

Updated : டிச 22, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வரும் நிலையில், அதனால் இங்கு மூன்றாம் அலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என மருத்துவ நிபுணர்கள் கணிக்கின்றனர்.ஒமைக்ரான் வகை வைரஸ் டெல்டா வைரஸை மும்மடங்கு அதிகம் பரவும் தன்மை கொண்டது என மத்திய அரசு நேற்று (டிச., 22) மாநிலங்களை எச்சரித்துள்ளது. வார் ரூமை மீண்டும் செயல்படுத்தவும், வேண்டுமென்றால் இரவு
இந்தியா, மூன்றாம் அலை, நிபுணர்கள், கருத்து,

புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வரும் நிலையில், அதனால் இங்கு மூன்றாம் அலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என மருத்துவ நிபுணர்கள் கணிக்கின்றனர்.

ஒமைக்ரான் வகை வைரஸ் டெல்டா வைரஸை மும்மடங்கு அதிகம் பரவும் தன்மை கொண்டது என மத்திய அரசு நேற்று (டிச., 22) மாநிலங்களை எச்சரித்துள்ளது. வார் ரூமை மீண்டும் செயல்படுத்தவும், வேண்டுமென்றால் இரவு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வாராந்திர பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு, வைரஸ் பரவும் வேகத்தை சொல்லும் ஆர் மதிப்பு உயர்ந்திருப்பது ஆகியவை நிலைமை தீவிரமடையக் கூடும் என்பதற்கான அறிகுறியாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

வைரசின் ஆர் மதிப்பு பல மாநிலங்களில் உயர்ந்துள்ளது. டிசம்பர் 19 தரவுகளின்படி, இந்தியாவின் தேசிய ஆர் மதிப்பு 0.89 ஆக உள்ளது. இது அதற்கு முந்தைய வாரங்களை காட்டிலும் கூடுதல் ஆகும். இந்த மதிப்பு உயர்ந்தபடி இருந்தால் அது கவலைக்குரியது என்கின்றனர்.


latest tamil news


இந்தாண்டு மார்ச் மாதம் டெல்டா பரவலால் இரண்டாம் அலை ஏற்பட்ட போது இந்த ஆர் மதிப்பானது தேசிய அளவில் 1.32 ஆக இருந்தது. இருப்பினும், பெரும்பாலான மருத்துவர்கள், தடுப்பூசி மற்றும் கடந்தகால நோய்த்தொற்றிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை வரவிருக்கும் ஒமைக்ரான் அலையின் சீற்றத்தை மழுங்கடிக்கச் செய்யும் என நம்புகிறார்கள். தற்போது வரை இந்தியாவில் பதிவாகியுள்ள 200-க்கும் மேற்பட்ட ஒமைக்ரான் கேஸ்களில் அனைவருக்கும் லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளது நிம்மதியளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-டிச-202121:05:24 IST Report Abuse
அப்புசாமி ஐ.ஐ.டி லேருந்து ஒருத்தர் கம்பியூட்டர்ல கணக்கு போட்டு மூணாவது அலை வராது. இன்னும் ரெண்டு மூணு நிபுணர்கள் வரவே வராது. வந்தாலும் ஓடிப் போயிரும்னு சொன்னாங்க. இப்போ, தவிர்க்க முடியாதுன்னு சொல்லறாங்க. எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன்...
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
22-டிச-202119:02:35 IST Report Abuse
தமிழன் குறைந்த பட்சம் அடுத்த ரெண்டு மாதங்களுக்கு ஒரு லாக்டவுன் வேண்டும். கிருமி பரவினால் தமிழக அரசு கண்டு கொள்ளாது. போன முறை இருந்தது போல் மக்கள் அலையவேண்டியது தான். ரெம்டெசிவர் இருவதாயிரத்துக்கு விற்றாது ஒரு கும்பல். என்ன செய்தது விடியல் அரசு? மதுரையில் பினங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு டோக்கன் கொடுக்கப்பட்டதை மதுரை மக்கள் மறக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X