தமிழகத்தில் 604 பேருக்கு கோவிட் பாதிப்பு: 695 பேர் நலம்

Updated : டிச 23, 2021 | Added : டிச 22, 2021 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 604 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 695 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,713 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 599 பேரும் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து வந்த தலா

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 604 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 695 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,713 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 599 பேரும் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து வந்த தலா இரண்டு பேர் , மற்றும் ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 604 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,41,617 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,65,18,363 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 344பேர் ஆண்கள், 260பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 16,00,270 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,41,309 ஆகவும் அதிகரித்து உள்ளது. 695 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,939ஆக உயர்ந்துள்ளது.

8பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில்3 பேரும் , அரசு மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,699 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை


சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக இருந்த நிலையில் இன்று (டிச.,22 ம் தேதி) 136 ஆக சற்று அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X