புவனேஷ்வர் :உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ப்ரளய்' ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்தது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ராணுவ கட்ட மைப்பை வலுபடுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறதுஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளவாடங்களை தயாரித்து அவற்றை பரிசோதித்து வருகிறது.
இந்நிலையில் நிலத்தில் இருந்து பாய்ந்து சென்று தொலைவில் உள்ள இலக்கை தகர்க்கும் ப்ரளய் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவின் பலாசோர் மாவட்டத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இன்று காலை நடத்தப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டி.ஆர்.டி.ஓ., அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை 500 கி.மீ., தொலைவு வரை சென்று அங்குள்ள இலக்கை துல்லியமாக தகர்க்கும் திறன் உடையது. வானில் பறக்கும்போது தன் பாதையை மாற்றிச் செல்லும் வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது, 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் உடையது.
ப்ரளய் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக டி.ஆர்.டி.ஓ., அமைப்பினருக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE