இது உங்கள் இடம்: நாம் வாக்காளரா, பிச்சைக்காரரா?

Updated : டிச 22, 2021 | Added : டிச 22, 2021 | கருத்துகள் (50)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.சுந்தரம், ஒட்டப்பிடாரம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்த மாநிலங்களில் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், தம்



உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



என்.சுந்தரம், ஒட்டப்பிடாரம், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.



latest tamil news


இந்த மாநிலங்களில் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், தம் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும், எதிர்க்கட்சிகள் எப்பாடுபட்டாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்றும் தீவிரம் காட்டுகின்றன.

இதற்காக மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்ற போர்வையில், தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை, அள்ளி வீசி வருகின்றன.


latest tamil news



இது போன்ற மாய்மால வாக்குறுதிகளை நம்பி ஓட்டு அளித்த தமிழக மக்கள், இன்று நொந்து நுாலாகியுள்ளனர். அது போன்று, அந்த ஐந்து மாநில மக்களும் ஏமாற வேண்டுமா? நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவதை, தேர்தல் கமிஷன் ஆதரிக்கிறதா... அந்த பொய்யான வாக்குறுதிகளுக்கும், தேர்தல் கமிஷனும் உடந்தையா...


latest tamil news


வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதை, தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்கிறதா?' பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தால், வேலை இல்லாத இளைஞருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குவோம்...' என்பது போன்ற, 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.

நன்றாக கவனியுங்கள்... 'இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம்' என்று சொல்லவில்லை. மாதம், 1,000 ரூபாய் 'இனாம்' தருவோம் என்று தான், கதை விடுகிறார். அதாவது, பஞ்சாப் தேர்தலில் தப்பித் தவறி ஆம் ஆத்மி வெற்றி பெற்று விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அம்மாநிலத்தில் வேலை இல்லாத இளைஞர்கள், 1,000 ரூபாயில் தான் பிழைத்து கொள்ள வேண்டும்; வேலை ஏதும் கொடுக்கப்படாது.

கோவாவில், திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, 'நாங்கள் ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாமாதம், 5,000 ரூபாய் வழங்குவோம்' என்று, 'ரீல்' சுற்றுகிறார்.இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், இந்த நாட்டு மக்களை, சுயமரியாதை உள்ள மனிதர்களாக கருதுவதே இல்லை;

பிச்சைக்கார கும்பலாகத் தான் கருதுகின்றன.அரசியல் கட்சிகளின் இந்த மனப்போக்கை, இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறதா என்பதே நம் கேள்வி. நாம் வாக்காளரா இல்லை பிச்சைக்காரரா?



Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skumaran - Chennai,சவுதி அரேபியா
26-டிச-202119:56:55 IST Report Abuse
skumaran Voters have become beggars in India, unfortunately though thanks to NAMO, who talks of development and takes votes on the same... everyone else, TMC/AAP takes voters into emotional rides or freebies like in TN and Voters suffer for 5 years Linking Aadhar with VoterID will become one soln preventing illegals from voting like some parties are trying desperately (and successful too) - BUT THE REAL PROBLEM IS WITH VOTERS IN SOME STATES - Selfish for the next meal, selfish for the money for the family, selfish to forget our CULTURE
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
25-டிச-202119:41:42 IST Report Abuse
spr "ஓட்டு என்ற சர்வசக்தி மிக்க அஸ்திரத்தை பொது மக்களில் பலர் விற்று விடுவதால் எல்லோரையும் பிச்சைக்காரர்களாகவே அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்." விற்பது என்றார் வகையில் அது வியாபாரம் பிச்சையல்ல ஆனால் விற்றது வாக்களித்த தானேயன்றி நம் உரிமையையல்ல அரசியல் சட்டப்படி குற்றவாளியை தேர்தலில் வாக்காளராக நிறுத்தக் கூடாது என்று தடுக்கவோ அல்லது ஒருமுறை தேர்ந்தடுக்கப்பட்டவரை நீக்கும் அதிகாரம் நமக்கு இல்லை என்பதாலேயே அரசியல்வியாதிகள் நம் உரிமைகளையும் மறுக்கிறார்கள் எனவே அதற்கான வழி கண்டுபிடிக்கப்பட வேண்டும் கைபேசியில் நாம் கட்டணம் கட்டித்தான் இணைப்பைப் பெறுகிறோம் ஆனாலும் பல தேவையற்ற விளம்பரங்கள் வருகின்றன அத்தனையையுமா வாங்குகிறோம் எனவே வாக்களிக்க அவர்களாகக் கொடுத்தால் மறக்காதீர்கள் எப்படியும் அந்தப் பணம் நம் பணம்தான் ஆனால் வாக்களிக்கும் பொழுது நேர்மையானவர்களை முடிந்தால் இனம் கண்டு வாக்களியுங்கள்
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-டிச-202120:26:05 IST Report Abuse
spr நோபல் பரிசு பெற்றது போல " The Strategic Implications of Indian Corruption" என்று குறிப்பிடப்படும் ப சி பாஜகவின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த வியாபாரி அருண் ஜெட்லீயால் மறைமுகமாகக் காப்பாற்றப்பட்ட தமிழக வியாபாரி. இச்செய்தி கொஞ்சம் பழையதே (மே 2020 ) மோடியின் நல்ல காலமோ என்னவோ, ஜெட்லீ உடல் நலம் குறைவால் பதவி விலக மோடி உடனடியாக இம்மாமனிதரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார் எனினும் கொண்டவள் மாங்கல்ய பலமோ இல்லை இவர் கொடுத்தவர்களின் ஆதரவோ இன்னமும் ப சி தண்டிக்கப்படவில்லை ஆனால் விஞ்ஞான முறையில் கலைஞருக்கும் அப்பன் இவர் அதனால்தான் மாறா சகோதரர்கள் இவரை இன்னமும் நம்பியிருக்கிறார்கள் அரசியலில் இப்படிக் கொடுத்து வாங்குவது இயல்பே மோடியும் விதிவிலக்கல்ல சில சமயம் போரில் வெற்றி பெற்ற அரசன் எதிராளியை சிறையில் அடைக்காமல் வெளியில் உலவவிட்டு என்று வேண்டுமானாலும் உன்னை சிறையில் தள்ளுவேன் தண்டனை தருவேன் என்று அடிக்கடி நினைவுறுத்துவது அந்த எதிராளிக்கு சித்திரவதை தரும் நினைப்பே மோடியும் அதைத்தான் செய்கிறார் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X