தியாகராஜர் ஆராதனை

Added : டிச 23, 2021 | |
Advertisement
தஞ்சாவூர்:திருவையாறு தியாகராஜரின் 175வது ஆண்டு ஆராதனை விழாவுக்கு, நேற்று பந்தக்கால் நடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சமாதி உள்ளது. ஆண்டுதோறும் ஐந்து நாட்கள், தியாகராஜருக்கு ஆராதனை விழா நடைபெறும். 175வது ஆராதனை விழா, ஜனவரி 18ம் தேதி மாலை 5:00 மணிக்கு துவங்கி, 22ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. தியாகராஜர்
 தியாகராஜர் ஆராதனை

தஞ்சாவூர்:திருவையாறு தியாகராஜரின் 175வது ஆண்டு ஆராதனை விழாவுக்கு, நேற்று பந்தக்கால் நடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சமாதி உள்ளது. ஆண்டுதோறும் ஐந்து நாட்கள், தியாகராஜருக்கு ஆராதனை விழா நடைபெறும். 175வது ஆராதனை விழா, ஜனவரி 18ம் தேதி மாலை 5:00 மணிக்கு துவங்கி, 22ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.

தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜனவரி 22ம் தேதி, தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி, இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், நுாற்றுக்கணக்கான சங்கீத வித்வான்கள் பங்கேற்று, பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒரு சேர பாடி, தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துவர்.

அப்போது, தியாகராஜருக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். விழாவிற்காக நேற்று காலை, பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபாவின் அறங்காவலர்கள் சந்திரசேகர், சுரேஷ் உள்ளிட்ட சபா நிர்வாகிகள் பந்தக்கால் நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X