சென்னை:பொங்கல் பண்டிகைக்காக, திருநெல்வேலி - தாம்பரத்துக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து, ஜன., 12 முதல் 17 வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், இரு மார்க்கத்திலும் அனைத்து இடங்களுக்கும் முன்பதிவு முடிந்து விட்டது.எனவே, சிறப்பு ரயில்களை இயக்க வேண்டு மென கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தென்மாவட்டங்களின் முக்கிய நகரங்களுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.* சிறப்பு ரயில் ஜன.,12ல் தாம்பரத்தில் இருந்து, இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து, ஜன., 13 இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்
* சென்னை எழும்பூரில் இருந்து, ஜன., 13 மாலை 3:30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், மறுநாள் அதிகாலை 4:20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து, ஜன., 14 மாலை 3:10 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 5:20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்
* திருநெல்வேலியில் இருந்து, ஜன., 16 இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்; தாம்பரத்தில் இருந்து, ஜன., 17 காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.