பேரூராட்சி அலுவலகத்தில் 'ரெய்டு' ரூ.51.32 லட்சம் அதிரடி பறிமுதல்

Added : டிச 23, 2021 | கருத்துகள் (3)
Advertisement
ஈரோடு:ஈரோடு பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குனர் அலுவலகத்துடன் இணைந்த, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 51.32 லட்சம் ரூபாய் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் மூன்றாம் தளத்தில், பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குனர் அலுவலகம், தணிக்கை பிரிவு அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு உதவி
 பேரூராட்சி அலுவலகத்தில் 'ரெய்டு' ரூ.51.32 லட்சம் அதிரடி பறிமுதல்

ஈரோடு:ஈரோடு பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குனர் அலுவலகத்துடன் இணைந்த, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 51.32 லட்சம் ரூபாய் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் மூன்றாம் தளத்தில், பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குனர் அலுவலகம், தணிக்கை பிரிவு அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு உதவி இயக்குனராக வெங்கடேசன், உதவி செயற் பொறியாளர்களாக நாகராஜ், லீலாவதி ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.


57 பேரூராட்சிகள்

இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் ஈரோடு மாவட்டத்தில், 42 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில், 15 பேரூராட்சிகள் என, 57 பேரூராட்சிகள் உள்ளன.அலுவலகத்துடன் உள்ள உதவி செயற்பொறியியல் பிரிவில், சில நாட்களாக சாலை விரிவாக்கம் தொடர்பாக, நடந்து முடிந்த பணிக்கு பணம் விடுவிப்பும், புதிய டெண்டர் வழங்கலும் நடந்துள்ளது.
இதற்காக அதிகாரிகளுக்கான லஞ்சத் தொகை நேற்று முன்தினமும், நேற்றும் இந்த அலுவலகத்தில் வைத்து பகிரங்கமாக வழங்குவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று மாலை, 3:30 மணிக்கு ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இத்தளத்தின் இடதுபுறம் உள்ள அலுவலகத்தில் உதவி இயக்குனர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர். அங்கு பண பரிமாற்றம் நடக்கவில்லை என்ற போதிலும், அங்கும் சிறிய அளவில் சோதனை செய்தனர். அங்கு பணம் ஏதும் சிக்கவில்லை.
அதே தளத்தின் வலதுபுறம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது.அங்கு போலீசார் நுழைந்ததும், அங்கிருந்தவர்கள் பையில் வைத்திருந்த பணத்தை, வராண்டாவில் வீசியும், டேபிள், ரிக்கார்டுகள் வைத்துள்ள பகுதிக்குள் நுழைந்தும் பதுங்கினர்.ஒவ்வொரு அலுவலரையும், அவரவர் இருக்கையில் அமர வைத்து போலீசார் சோதனை செய்தனர். இரவு 7:15 மணி வரை சோதனை தொடர்ந்தது.


விசாரணை

பெண் ஊழியர்களை மட்டும் முதலில் சோதித்து, வீட்டுக்கு அனுப்பினர். மற்ற அலுவலர்களிடம் சோதனை செய்து பணம், ஆவணங்களை கைப்பற்றினர்.இரவு, 7:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் - பேரூராட்சிகள், ஈரோடு மண்டல அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை நடத்தினோம்.கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 51.32 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள், ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-டிச-202119:13:06 IST Report Abuse
Bhaskaran Tamilaga arasu athigaarikal lancham vaangaatha naal piravaanaal ennum ennathudan ullavargal
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
23-டிச-202112:06:09 IST Report Abuse
நக்கீரன் ஆம், இந்த ஒரு நாளோடு முடிந்தது. மக்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டு மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியதுதான். இதுவரையில் லஞ்சம் வாங்கியவர்கள் அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டதாக சரித்திரமே இல்லை. அதனால், இது தொடரும். பணம் இருப்பவர்கள் அரசாங்கத்தில் வேண்டிய காரியங்களை முடித்துக்கொள்கிறார்கள். பணம் இல்லாதவர்கள் அலைந்ததுதான் மிச்சம். வாழ்க இந்த போலி ஜனநாயகம். பாவம் ஏழை பொது மக்கள்.
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
23-டிச-202109:22:03 IST Report Abuse
g.kumaresan இந்த அலுவலகத்தில் மட்டும் தினசரி 50 லட்சம் என்றால் ஒரு வருடம் சுமார் 100கோடி மேல். மொத்த அதிகாரிகள் சொத்து கணக்கு எடுக்க வேண்டும்.சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.தண்டனை வாங்கி தர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X