விஷம் குடித்த ஜோடி ஓடும் பஸ்சில் பரபரப்பு

Added : டிச 23, 2021 | |
Advertisement
சேலம்:முறையற்ற காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஓடும் பஸ்சில் விஷம் குடித்த காதல் ஜோடிக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டம், கஸ்பா கருணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 20. காஞ்சிபுரம், மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி, 20; இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர்.உறவினர்களான இவர்கள், உறவு முறையில் அண்ணன், தங்கை என்பதால், பெற்றோர்

சேலம்:முறையற்ற காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஓடும் பஸ்சில் விஷம் குடித்த காதல் ஜோடிக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், கஸ்பா கருணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 20. காஞ்சிபுரம், மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி, 20; இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர்.உறவினர்களான இவர்கள், உறவு முறையில் அண்ணன், தங்கை என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விரக்தி அடைந்த இருவரும், நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு வீடுகளில் இருந்து வெளியேறி பெங்களூரு சென்றனர்.பெங்களூரில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறிய இவர்கள், மாலை 5:30 மணிக்கு பஸ், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, தாங்கள் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளனர். இருவரையும், சேலம் அருகே டால்மியா போர்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிரைவர், கண்டக்டர் சேர்த்தனர். கருப்பூர் போலீசார் விசாரித்து, பெற்றோருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X