லக்னோ :உத்தர பிரதேசத்தில் சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கு நடந்த தேர்வில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் மோசடி செய்தவர் போலீசாரிடம்
பிடிபட்டார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு நடந்தது.இதில் பங்கேற்ற ஒருவர் காதினுள் மிக நுண்ணிய 'புளுடூத்' கருவியை பொருத்தி, அதை மறைக்க தலையில் 'விக்' அணிந்து தேர்வறைக்கு வந்தார்.
'மெட்டல் டிடெக்டர்' இயந்திரம் அமைந்திருந்த வாசல் வழியே அவர் வந்தபோது எச்சரிக்கை மணி அலறியது. பாதுகாப்பாளர்கள் ஓடி வந்து அவரை சோதனை செய்த போது ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் ஒருமுறை வாசல் வழியே அனுப்பினர்.
![]()
|
அப்போது மீண்டும் எச்சரிக்கை மணி அடித்தது. இதையடுத்து அவரை போலீசார் முழுமையாக சோதனையிட்டனர். அப்போது அவர் தலையில் 'விக்' வைத்து அதற்குள் 'புளூ டூத்' ஒயர்லஸ் கருவியை பொருத்தி தேர்வுக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவரிடம் நடத்திய விசாரணையில் புளு டூத் வாயிலாக வெளியில் உள்ள நண்பர்களிடம் விடைகளை கேட்டு தேர்வெழுத அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த மோசடி 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது.
தமிழில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., என்ற படத்தில் நடிகர் கமல், இதுபோல் மோசடி செய்து தேர்வு எழுதும் கேரக்டரில் நடித்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE