இளம்பெண் சாவில் மர்மம் சுடுகாடில் உடல் பரிசோதனை

Added : டிச 23, 2021 | |
Advertisement
நரசிங்கபுரம்-திருவள்ளூரை அடுத்த, நரசிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி செல்வமூர்த்தி, 38; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜனனி, 36. தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.அச்சிறுப்பாக்கம், களத்துாரில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த வந்த ஜனனி, கடந்த மாதம் 23ம் தேதி, உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.அவரது

நரசிங்கபுரம்-திருவள்ளூரை அடுத்த, நரசிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி செல்வமூர்த்தி, 38; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜனனி, 36. தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.அச்சிறுப்பாக்கம், களத்துாரில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த வந்த ஜனனி, கடந்த மாதம் 23ம் தேதி, உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.அவரது உடல், நரசிங்கபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், மகள் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது தாய் குமாரி, மப்பேடு போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார்.திருவள்ளூர் ஆர்.டி.ஓ., ரமேஷ், தாசில்தார் செந்தில்குமார், டி.எஸ்.பி., சந்திரதாஸ், தடவியல் நிபுணர் நிர்மலா, அரசு மருத்துவர்கள் நாராயணன், பிரபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள், நேற்று, நரசிங்கபுரம் சுடுகாடில் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.அப்பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X