படுக்கையில் படுத்தபடி ஆஜரான 'மாஜி' டி.ஜி.பி.,க்கு எச்சரிக்கை

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
சண்டிகர் : கொலை வழக்கில் சிக்கியுள்ள பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி., சுமேத் சைனி, படுக்கையில் படுத்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜரானதால், அவருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது.பஞ்சாபில், 2012 முதல் 2015 வரை போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்தவர் சுமேத் சிங் சைனி.கடந்த 1994ல் வினோத் குமார், அசோக் குமார் மற்றும் முக்தியார் சிங் ஆகிய மூன்று பேரை கடத்தி கொலை செய்த வழக்கில்
Sumedh Singh Saini, Warned, Court, Virtual Hearing, Lying On Bed,

சண்டிகர் : கொலை வழக்கில் சிக்கியுள்ள பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி., சுமேத் சைனி, படுக்கையில் படுத்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜரானதால், அவருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது.

பஞ்சாபில், 2012 முதல் 2015 வரை போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்தவர் சுமேத் சிங் சைனி.கடந்த 1994ல் வினோத் குமார், அசோக் குமார் மற்றும் முக்தியார் சிங் ஆகிய மூன்று பேரை கடத்தி கொலை செய்த வழக்கில் சுமேத் சைனி உள்ளிட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுமேத் சைனி இருப்பதாக குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன்னிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட சுமேத் சைனி, படுக்கையில் படுத்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரானார். இது நீதிபதியை கோபமடைய வைத்தது.


latest tamil news


இதையடுத்து நீதிபதி சஞ்சீவ் அகர்வால் கூறியதாவது: படுக்கையில் படுத்தபடி சுமேத் சிங் சைனி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரானார். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது தன் உடல்நிலை சரியாக இல்லை என்றும், தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் மருத்துவ சான்றிதழை அவர் சமர்ப்பிக்கவில்லை.

அவரது இந்த நடத்தையை கண்டிக்கிறோம். வரும் காலங்களில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகும்போது ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நீதிமன்ற மாண்பை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
23-டிச-202112:37:20 IST Report Abuse
Suppan ஒரு வக்கீல் தன்னுடைய "மனைவியைக்" கொஞ்சிக் கொண்டே காணொலியில் வழக்காடுகிறார். இந்த முன்னாள் காவல் அதிகாரி படுத்துக் கொண்டே நீதிமன்றத்தின் "மாண்பைக்" காப்பாற்றுகிறார். காலம் செய்யும் கோலமடி.
Rate this:
Cancel
23-டிச-202112:07:18 IST Report Abuse
ஆரூர் ரங்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-டிச-202110:54:04 IST Report Abuse
அசோக்ராஜ் காமிராவில் முகம் காட்டினானா சாட்சி அளித்தானா அதை மட்டும் பார்த்து வழக்கு நடத்துங்கள். நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X