சமத்துவ பொங்கலால் ம.தி.மு.க.,வில் சர்ச்சை

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (30)
Advertisement
கோவை: சமத்துவ பொங்கல் விழா விளம்பரத்தில், அவைத் தலைவர் துரைசாமி பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதால், அவ்விழாவில் பங்கேற்கும் தலைமை நிலைய செயலர் துரை வைகோவுக்கு, கொங்கு மண்டல ம.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ம.தி.மு.க.,வில் உள்ள மும்மத மகளிர் சார்பில், ஜன., 14ல் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது. இந்நிகழ்ச்சியை, கட்சி அவைத் தலைவர் துரைசாமியின் சொந்த ஊரான
MDMK, Vaiko, Pongal, Marumalarchi Dravida Munnetra Kazhagam

கோவை: சமத்துவ பொங்கல் விழா விளம்பரத்தில், அவைத் தலைவர் துரைசாமி பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதால், அவ்விழாவில் பங்கேற்கும் தலைமை நிலைய செயலர் துரை வைகோவுக்கு, கொங்கு மண்டல ம.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க.,வில் உள்ள மும்மத மகளிர் சார்பில், ஜன., 14ல் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது. இந்நிகழ்ச்சியை, கட்சி அவைத் தலைவர் துரைசாமியின் சொந்த ஊரான திருப்பூரில் நடத்த, துரை வைகோ ஏற்பாடு செய்துள்ளார்.ஆனால், இது தொடர்பான விளம்பரங்களில் துரைசாமி பெயர் இடம்பெறவில்லை. இதனால், கொங்கு மண்டல நிர்வாகிகளும், துரைசாமி ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


மதிமுகவில் உள்ள மும்மத மகளிர் சார்பில் ஜனவரி 14ல் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது. கட்சியின் அவை தலைவர் துரைசாமியின் சொந்த ஊரான திருப்பூரில் நடத்த, வைகோ ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இது தொடர்பான விளம்பரஙக்ளில் துரையின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் கொங்கு மண்டல நிர்வாகிகளும் , துரை ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் வைகோவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் , ஆனால் கட்சியில் சமத்துவம் இல்லை. வாரிசு அரசியலை எதிர்த்ததால் துரை அவமரியாதை செய்யப்படுகிறார். கூஜா தூக்கினால் நல்லவர்களா ? 28 ஆண்டு அரசியல் பயணத்தில், வைகோவை நம்பி மோசம் போய் விட்டோம். புறக்கணிப்போம் சமத்துவ பொங்கலை. இவ்வாறு கூறியுள்ளனர்.

latest tamil newsசமூக வலைதளங்களில் துரை வைகோவுக்கு எதிராகவும், துரைசாமிக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். அதன் விவரம்:

* சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்; ஆனால், கட்சியில் சமத்துவம் இல்லை. அண்ணாதுரை காலத்து அரசியல் தலைவர்களில் ஒருவர், தொழிற்சங்கத் தலைவருக்கு அழைப்பு இல்லை. வாரிசு அரசியலை எதிர்த்ததால் அவமரியாதை செய்யப்படுகிறார்

* உட்கட்சி ஜனநாயகம் இல்லை. கூஜா, பல்லாக்கு துாக்கினால் நல்லவர்கள். 28 ஆண்டு அரசியல் பயணம் வீணாகி விடடது. வைகோவை நம்பி மோசம் போய் விட்டோம்

* மண்டல நிர்வாகிகளை அழைக்காமல் அவமதித்து, ஜால்ரா அடிக்கும் நிர்வாகிகளை அழைத்து, அரசியல் செய்து கொள்ளட்டும். புறக்கணிப்போம் சமத்துவ பொங்கலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
28-டிச-202109:55:34 IST Report Abuse
Hari கட்டுமரம் இன்னும் மிதக்கிறது என அய்யப்படவேண்டி உள்ளது தமிழனுக்கு .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-டிச-202103:52:51 IST Report Abuse
meenakshisundaram கூடா நட்பு -மதிமுக ,திமுக நட்பு. இதனால் அழியப்போகும். அழிந்து விட்ட கட்சி வைகோவின் மதிமுகவே ஸ்டாலினை பார்த்து தலையை வைகோ முடிந்து கொள்வது சரியாக இருக்காது. இப்போதைக்கு ஸ்டாலின் முடி இல்லைன்னாலும் விக் 'வைத்துக்குக் கொண்டுள்ளார் ஆனால் வைகோவோ அவரை பார்த்து தனது வரிசையும் 'உள்' புகுத்தியது சரிவராது
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-டிச-202118:55:35 IST Report Abuse
Bhaskaran Kadayai pillai kitte koduthaachu ini chinna muthalaali vachathuthaan sattam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X