லத்தீன் மொழியில் 'மில்லிபீட்' என்றால் ஆயிரங்கால்கள் என்று பொருள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அண்மையில்தான் ஆயிரம் கால்களைக் கொண்ட பூச்சிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுவரையில் உயிரியலாளர்கள் கண்டறிந்து வகைப்படுத்தியவை எல்லாம் குறைந்தது 34 முதல் அதிகபட்சமாக 400 கால்களைக் கொண்டவைதான். ஒரே ஒரு வகை ஊர்வன மட்டும் 750 கால்கள் வரைகொண்டவை.
ஆனால், அண்மையில் மேற்கு ஆஸ்திரேலியாவில், கிழக்கு தங்கச் சுரங்கப் பகுதியில், பூமிக்குக் கீழே 200 அடி ஆழத்தில் வசிக்கும் சில சென்டிபீட்களுக்கு 1,306 கால்கள் இருப்பதை ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கடியில், மண்ணை இளக்கி, கற்களுக்கிடையில் இண்டு இடுக்குகளில் ஊறிச் செல்வதற்கு ஏற்ப, தங்கள் உடல்களை இந்த மில்லிபீட்கள் தகவமைத்துக் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இதனால்தான் இவற்றுக்கு 'இயுமிலிபீஸ் பெர்செபோன்' என்று பெயரிட்டுள்ளனர். லத்தீன் மொழியில் இயுமிலிபீஸ் என்றால் 'மெய்யாகவே ஆயிரம் கால்கள்' என்று பொருள். பெரிஸ்போன் என்பது நிலத்தடி உலகிற்கான கிரேக்கக் கடவுளின் பெயர்.
நிலத்துக்கு அடியில் வாழும் உயிரினங்களைப் பற்றி அறிவியலுக்கு தெரியாத பல்லாயிரம் விஷயங்கள் இருப்பதையும் இந்த கண்டிபிடிப்பு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE