சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சிக்கனமாக மின்சாரம் குடிக்கும் சில்லு!

Added : டிச 23, 2021 | கருத்துகள் (1)
Advertisement
மின்கலன்களில் சேமிக்கப்படும் மின்னாற்றலைக்கொண்டு அதிக நாட்களுக்கு வேலை செய்யும் தொழில்நுட்பத்தை ஐ.பி.எம்., மற்றும் சாம்சங் ஆகியவை கூட்டாக உருவாக்கியுள்ளன. கணினிகள் முதல் அதிதிறன் மொபைல்கள் வரை மூளையாக செயல்படுபவை சிலிக்கன் சில்லுகள்தான்.இந்த சில்லுகள் வேலை செய்வதற்கு தற்போது அதிக மின்னாற்றலை எடுத்துக்கொள்கின்றன. இதற்கு காரணம், இன்றைய சில்லுகளில்
சிக்கனமாக மின்சாரம் குடிக்கும் சில்லு!

மின்கலன்களில் சேமிக்கப்படும் மின்னாற்றலைக்கொண்டு அதிக நாட்களுக்கு வேலை செய்யும் தொழில்நுட்பத்தை ஐ.பி.எம்., மற்றும் சாம்சங் ஆகியவை கூட்டாக உருவாக்கியுள்ளன. கணினிகள் முதல் அதிதிறன் மொபைல்கள் வரை மூளையாக செயல்படுபவை சிலிக்கன் சில்லுகள்தான்.

இந்த சில்லுகள் வேலை செய்வதற்கு தற்போது அதிக மின்னாற்றலை எடுத்துக்கொள்கின்றன. இதற்கு காரணம், இன்றைய சில்லுகளில் பதிப்பிக்கப்படும் 7 நேனோ மீட்டர் அளவுள்ள டிரான்சிஸ்டர்கள்தான்.

அண்மையில் ஐ.பி.எம்., வெறும் 2 நேனோமீட்டர் அளவே உள்ள டிரான்சிஸ்டர்களை உருவாக்கி அசத்தியது. இவை மிகவும் குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தும். தற்போது 2 நேனோமீட்டர் அளவுள்ள 50 பில்லியன் டிரான்சிஸ்டர்களை ஒரே சில்லில் பதித்து வெளியிட்டுள்ளது ஐ.பி.எம்., - சாம்சங் கூட்டணி. விரல் நக அளவே உள்ள இந்த சில்லு பழைய சில்லுகளைவிட 75 சதவீதம் குறைந்த மின்சாரத்தில் விரைவாக வேலை செய்கிறது.

இதனால், தற்போதைய மொபைலில், இந்த சில்லினைப் பதித்தால், ஒரே சார்ஜில், ஒரு வாரத்திற்கு மேல்கூட அது வேலை செய்யும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறை, டிரான்சிஸ்டர்களை படுகிடையாக வைத்து சர்க்யூட்டில் பற்றவைக்காமல், அவற்ரை நெடுக வைத்து இணைத்துஉள்ளனர். அதனால், குறைந்த இடத்தில் அதிக டிரான்சிஸ்டர்களை பதிப்பித்திருப்பதோடு, இணைப்பான்களின் தொலைவையும் குறுக்கியுள்ளனர். இதனால் மின்சாரம் குறைவாகவே செலாகும் என ஐ.பி.எம்., - சாம்சங் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மின்சார சிக்கனம் சில்லுகளுக்கும் வந்துவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Johor,மலேஷியா
28-டிச-202106:41:44 IST Report Abuse
Siva ப்ரோசெசரின் சைஸ் குறைய குறைய மின்சார கசிவு மற்றும் தரவு கசிவு தடுக்க முடியாதது. மாறாக அதிக மின்னாற்றலை சேமிக்கும் பேட்டரிகளை கன்டுபிடிப்பது மேலானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X