புதுடில்லி: உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் 2021-ல் இந்தியா 142-வது இடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார். அதனை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
![]()
|
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையை நிராகரித்துள்ளார். பத்திரிகை சுதந்திரம் என்பதற்கு சரியான விளக்கம் அளிக்காததை காரணமாக கூறியிருக்கிறார்.
![]()
|
அதற்கான விளக்கம் என்பது எளிமையானது, வெளிப்படையானது. பத்திரிக்கை சுதந்திரம் என்பது மோடி அரசால் பறிக்கப்பட்ட சுதந்திரம் என்பது ஆகும். அதற்கு எடுத்துக்காட்டுகள், ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத், கரண் தாப்பர், பரன்ஜாய், பாபி கோஷ், புன்யா பிரசுன் வாஜ்பாய், ரூபின், கிருஷ்ண பிரசாத் என பட்டியல் நீள்கிறது.
I&B Minister, Mr Anurag Thakur, has dismissed the ranking of India in the World Press Freedom index.
His reasoning: the lack of clear definition of press freedom
The definition is quite simple and obvious: Press Freedom is the freedom that was taken away by the Modi government
— P. Chidambaram (@PChidambaram_IN) December 22, 2021
மேலும் என்.டி.டி.விக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்குகள், தைனிக் பாஸ்கர் மீது வருமான வரித்துறை சோதனைகள் ஆகியவையும் அடக்கம். சுதந்திரத்தை திருப்பியளித்தால், இந்தியாவின் தரவரிசை உயர்வதை நீங்கள் காண்பீர்கள். என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE