புலிகள் காப்பகத்தில் 'டிரோன் மேப்பிங்' திட்டம்; மனித - வனவிலங்கு மோதல் தடுக்க முயற்சி!

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | |
Advertisement
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில், யானைகளால், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்க, 'டிரோன் மேப்பிங்' திட்டத்தை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் அதிக அளவிலான யானைகள் உள்ளன.டாப்சிலிப் தவிர்த்து மற்ற


பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில், யானைகளால், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுவதை தடுக்க, 'டிரோன் மேப்பிங்' திட்டத்தை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் அதிக அளவிலான யானைகள் உள்ளன.
டாப்சிலிப் தவிர்த்து மற்ற வனச்சரக பகுதிகளான, முடீஸ், ஹைபாரஸ்ட், சின்கோனா, அக்காமலை, பச்சமலை எஸ்டேட் பகுதிகள்; சமவெளிப்பகுதிகளான சேத்துமடை, செமணாம்பதி, தம்மம்பதி, ஆழியாறு, பருத்தியூர், ஆண்டியூர், அர்த்தநாரிபாளையம் பகுதிகள் யானைகளின் வலசைப்பாதைகளாக உள்ளன.



latest tamil news




ஆண்டு முழுவதிலும் இப்பகுதிகளில் உள்ள யானைகள், எஸ்டேட் பகுதிகளுக்குள் வருவதால் அதிக அளவில், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுவதுடன், அங்குள்ள ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப்பொருட்களை யானைகள் சேதப்படுத்துகின்றன.
ஆனைமலை பகுதியில், சில இடங்களில், விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்கள் சேதமாகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் யானைகள் தாக்கி, ஆறு பேர் இறந்து, 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


latest tamil news




யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து மோதலை தடுக்க, 'டிரோன் மேப்பிங்' திட்டத்தை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:
'டிரோன் மேப்பிங்' திட்டத்தின்படி, தற்போது, இரண்டு அதிநவீன 'டிரோன் கேமராக்கள்' வாயிலாக, வனச்சரக பகுதிகள் தொடர்ந்து படம் எடுக்கப்பட்டு, வரைபடம் (மேப்) உருவாக்கப்படுகிறது.
யானைகள் வந்து செல்லும் பகுதிகள், நீராதாரங்கள், மோதல் போக்கு ஏற்படும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, வரைபடத்தில் குறிக்கப்படும்.முதற்கட்டமாக, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில், 200 சதுர கி.மீ., அளவுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரைபட பணி முடிந்ததும், யானைகள் வந்து செல்லும் பாதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.


latest tamil news




எஸ்டேட் பகுதிக்குள் யானைகள் நுழைந்ததும், 'வாட்ஸ்ஆப்', 'எஸ்.எம்.எஸ்.,' வாயிலாக எஸ்டேட் மேலாளர்கள், தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மனித - வனவிலங்கு தடுப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு வாகனங்களில் சென்று யானைகளை திசைதிருப்பி, மனித - வனவிலங்கு மோதல் தடுக்கப்படும். இத்திட்டம், விரைவில் மற்ற வனச்சரக பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு, தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X