பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Updated : டிச 24, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (23)
Advertisement
சென்னை: இயற்கையை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான மஞ்சப்பை இயக்கம் மற்றும் அதற்கு மாற்றான பொருட்கள் குறித்த கண்காட்சியை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மஞ்சப்பை தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டார்.பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: மஞ்சப்பை வைத்திருந்தால்
முதல்வர்ஸ்டாலின், ஸ்டாலின், மஞ்சப்பை, பிளாஸ்டிக்,

சென்னை: இயற்கையை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான மஞ்சப்பை இயக்கம் மற்றும் அதற்கு மாற்றான பொருட்கள் குறித்த கண்காட்சியை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மஞ்சப்பை தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டார்.

பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என கிண்டலாக பேசி வந்தனர். ஆனால், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. வளர்ச்சிக்கு இணையாக சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிளாஸ்டிக், சுற்றுச்சூழலை சீரழிக்கிறது. விவசாயத்தை பாதிக்கிறது.


latest tamil newsஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் சூழலுக்கு பெரும் ஆபத்து. பிளாஸ்டிக் பயன்பாட்டால் கால்நடை கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. இயற்கையை கெடுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதனை மக்கள் தவிர்க்க வேண்டும். விதி மீறிய 130 தொழிற்சாலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
28-டிச-202102:44:40 IST Report Abuse
meenakshisundaram இனிமேல் பேனாக்கள் பிளாஸ்டிக் இல்லாம தயாரிக்கப்படும் ?
Rate this:
Cancel
ரத்தினம் - சமயநல்லூர்,இந்தியா
27-டிச-202120:44:19 IST Report Abuse
ரத்தினம் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை, செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை, அப்படியே புது திட்டம் போல் மீடியா பலத்தால் நிரூபிக்க முயற்சிப்பது எதற்காக? உதாரணம் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம். மத்திய அரசு என்றோ இதை முன்னெடுத்து மாநிலங்கள் செயல்படுத்த அறிவுறுத்தியது. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியின்போது பெரிதாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம், மக்களின் போதிய ஒத்துழைப்பின்மையால், குறிப்பாக கடைக்காரர்கள் முன்பு இலவசமாகக் கொடுத்த பிளாஸ்டிக் கவர்களை மக்களிடம் காசு வாங்கிக்கொண்டு அதையே கொடுத்ததால், இந்தத் திட்டம் பெரிதாக எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. மறுபடி இதை புதிதுபோல் இவர்களின் திட்டம்போல் அறிமுகப்படுத்துவது ஏமாற்றுச்செயல் இல்லையா? இரண்டாவது உதாரணம், அம்மா உணவகம் போல் கலைஞர் உணவகம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தின் அடிப்படையில் அதே பெயரில் விரிவாக்கம் செய்யலாமே? அதே வேலையைச் செய்ய எதற்கு இரண்டு திட்டங்கள்? மக்கள் சிந்தித்துவிடக்கூடாது என்பதால் மீடியாக்கள் ஓவர்டைம் செய்வது தெளிவு. மற்றொரு உதாரணம், அதிமுக ஆட்சியின்போது மூன்று மாவட்டங்களில் கொரோனா பரவியிருந்தபோது 'கொரோனா பரவிட்டது.. மாநில அரசின் மெத்தனம்' என்று கூவிய இதே மீடியாக்கள், இன்று 30 மாவட்டங்களில் கொரோனா இல்லை என்று கொட்டையெழுத்தில் போடுகின்றனவே, அப்படியென்றால் 8 மாவட்டங்களில் கொரோனா பரவல் உள்ளது என்றுதானே பொருள்? 3 மாவட்டங்களுக்கு அன்று கூவியவர்கள், 8 மாவட்டங்கள் என்று வரும்போது இன்று அடக்க்க்க்க்கி வாசிப்பதன்? இதுதான் நம்மூரு 'நடுநிலை' போல?
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
23-டிச-202122:20:31 IST Report Abuse
வாய்மையே வெல்லும் டாஸ்மாக் கடையில் ஒரு ரூபா தண்ணி பாக்கெட்டு விலை இனிமே கிடு கிடு வென்று ஏறி .. பாசக்கார "குடி" மக்களின் வெறுப்பை ஏற்றுவது உறுதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X