பஞ்சாப் லூதியானா நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடிப்பு: ஒருவர் பலி

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (12)
Advertisement
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்தது. ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நீதிமன்றத்தில் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, 2வது மாடியில் உள்ள கழிவறையில் மர்மப்பொருள் வெடித்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் லூதியானா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால்,
ludhiyana, blast, punjab, court, police

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்தது. ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீதிமன்றத்தில் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, 2வது மாடியில் உள்ள கழிவறையில் மர்மப்பொருள் வெடித்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் லூதியானா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அங்கிருந்தவர்கள் பயத்தில் வெளியேறினர். இந்த சம்பவத்தில், அந்த கட்டடத்தின் சுவர், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். நீதிமன்ற வளாகத்தை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் குண்டு வெடித்தது. 2 பேர் மரணம் அடைந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். 2-வது தளத்தில் உள்ள பாத்ரூமில் பகல் 12 மணிக்கு சம்பவம் நடந்தது. சுவர்கள் இடிந்தன. மக்கள் அலறி ஓடினர். என்ன வகையான குண்டு என நிபுணர்கள் ஆராய்கின்றனர். சட்டசபை தேர்தலை சீர்குலைக்க தேசவிரோத சக்திகள் செய்யும் சதி இது என முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி


இது தொடர்பாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் சில தேச விரோத மற்றும் சமூக விரோத கும்பல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அரசு விழிப்புடன் உள்ளது. மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.


latest tamil newsலூதியானா போலீஸ் கமிஷனர் குருபிரீத் சிங் புல்லார் கூறுகையில், நீதிமன்ற வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தடயவியல் துறை அதிகாரிகள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
23-டிச-202119:05:45 IST Report Abuse
Bhaskaran Immaturity theeviravaatham murayileye killidanum .
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
23-டிச-202117:14:47 IST Report Abuse
anbu பயிர் செய்பவர்கள் என்ற பெயரில் பயங்கரவாதம் உடுருவி வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. காங்கிரஸ் மற்றும் அதன் அல்லக்கைகள் தான் இந்த விவசாயிகள். பயங்கரவாதம் தான் விளைபொருட்கள். அறுவடை ஆரம்பம். அப்பாவி உயிர்கள் விலை கொடுக்கப் பட்டுள்ளன.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-டிச-202116:09:44 IST Report Abuse
Kasimani Baskaran காங்கிரஸ் ஆட்சியில் குண்டு வைக்க சொல்லியா கொடுக்க வேண்டும்..
Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-டிச-202117:12:43 IST Report Abuse
முக்கண் மைந்தன் காங்கிரஸ் ஆட்சில அதெ வெக்கிற ஓங்கும்பலுக்கு வேற பொளப்பு ஏது ?????💯🦎💯🦎💯🦎...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X