புதுடில்லி: இந்தியாவில் 60 சதவீதம் பேருக்கு கோவிட் தடுப்பூசியின் இரு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட் பரவலை தடுக்கும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன. தற்போது ஒமைக்ரான் தொற்று பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகளவு தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இன்று (டிச.,23) காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 139.69 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், ‛நமது சுகாதாரப் பணியாளர்களின் பங்கேற்பு மற்றும் அர்ப்பணிப்பு முயற்சியால், தகுதியான மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்போது முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்,' எனத் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE