எம்.ஜி.ஆர்.,ஒரு நாள்தான் தளர்ந்தார், மறுநாளே இறந்தார்

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (7)
Advertisement
நாளை( 24/12/2021) எம்.ஜி.ஆரின் 34 வது நினைவு தினம்முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை.,ஒரு நாளும் தளர்வான உடையுடனோ,நடையுடனோ யாருமே பார்த்திருக்கமாட்டார்கள்,அந்த அளவிற்கு தன்னையும் தன்னைச் சுற்றி இருந்தவர்களையும் உற்சாகமாக சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்தார், ஒரு நாள் மேடையில் தளர்ந்தார் மறுநாளே இறந்தார் என்று எம்.ஜி.ஆரின் உதவியாளராக இருந்த கே.மகாலிங்கம் நினைவு
 எம்.ஜி.ஆர்.,ஒரு நாள்தான் தளர்ந்தார், மறுநாளே இறந்தார்


latest tamil news


நாளை( 24/12/2021) எம்.ஜி.ஆரின் 34 வது நினைவு தினம்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை.,ஒரு நாளும் தளர்வான உடையுடனோ,நடையுடனோ யாருமே பார்த்திருக்கமாட்டார்கள்,அந்த அளவிற்கு தன்னையும் தன்னைச் சுற்றி இருந்தவர்களையும் உற்சாகமாக சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்தார், ஒரு நாள் மேடையில் தளர்ந்தார் மறுநாளே இறந்தார் என்று எம்.ஜி.ஆரின் உதவியாளராக இருந்த கே.மகாலிங்கம் நினைவு கூர்ந்தார்.
எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் இருந்து அவர் முதல்வராக இருந்து இறந்தது வரை அவரது தனி உதவியாளராக இருந்தவர் மகாலிங்கம்.தற்போது சென்னையில் வசிக்கும் மகாலிங்கம் எம்ஜிஆர் பற்றிய பல நினைவுகளை மட்டுமல்ல பல அரிய புகைப்படங்களையும் பொக்கிஷமாக வைத்துள்ளார்.
அவற்றில் ஒன்றுதான் சென்னை கிண்டி கத்திப்பார நேரு சிலை திறப்பு விழாவில் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சிக்கான படமாகும்.
22/12/1987 ம் மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே சோர்வுடன் காணப்பட்டார், எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல்தான் இருந்தார் பிரதமர் வரும் நிகழ்ச்சி என்பதால் அவசியம் போயாகவேண்டும் என்று கூறிவிட்டார்.
குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியனுடனும் தனது பாதுகாப்பு அதிகாரி ஆறுமுகத்துடனும் விழாவிற்கு சென்றார்.நாங்கள் ராமாவரம் தோட்டத்தில் இருந்தோம்.வழக்கமாக பிரதமர் மேடையில் முதல்வர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் ஆனால் எம்.ஜி.ஆரின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரது பாதுகாப்பு அதிகாரி சி.எஸ்.ஆறுமுகத்தையும் மேடையில் எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருப்பதற்கு அன்றைய பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுப்பிரமணியன் அனுமதித்தார்.
ராஜீவ்காந்தியை பிரமாதமாக வரவேற்று அவருக்கு சால்வை,சந்தனமாலை அணிவித்து நினைவு பரிசு கொடுத்து மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்..பிரதமர் ராஜீவ் காந்தியும் மிகுந்த உற்சாகத்துடன் எம்.ஜி.ஆரை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
எம்.ஜி.ஆர்,,பேசவேண்டிய முறை வந்த போது அவர் மைக் முன்பாக வந்தார், ‛மைக்' சரியாக இருந்தாலும் அந்த மைக்குகளை அசைத்து அதை தனக்கு தோதாக மாற்றி வைத்துக் கொண்டு பேசுவது அவரது பழக்கம்.
அன்று அவர் மைக்கை சரி செய்ய கைகளை துாக்க முயன்றார் முடியவில்லை விட்டுவிட்டார் ‛மைக்' சற்று விலகியிருந்தது அப்படியே பேச ஆரம்பித்தார் இதைக்கவனித்த பிரதமர் ராஜீவ் காந்தி எழுந்து அவரே எம்ஜிஆர்., பேசுவதற்கு ஏற்ப மைக்கை சரி செய்தார் இதைப்பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர்.,லேசாக புன்னகைத்தார்.பேசி முடித்த பிறகு மிகவும் தளர்ந்து போய் அமர்ந்தார்.
அதன்பிறகு வீட்டிற்கு வந்து படுத்தவர்தான் மறுநாள் முழுவதும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் டாக்டர்கள் மருத்துவமனைக்கு போகலாம் என்றனர் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பில் எம்.ஜி.ஆர்,,மீளாத்துாக்கத்தில் ஆழ்ந்தார் மக்கள் மீளாத்துக்கத்தில் ஆழ்ந்தனர்.
அவர் இறந்து 34 வருடமாகிறது ஆனால் இன்றைக்கும் அவர் இறந்த நாளான்று அவரது சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்த திரளான பேர் வருகின்றனர் காரணம் அவர் மீது கொண்ட பாசமும்,பற்றும்தான்.
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
28-டிச-202118:28:04 IST Report Abuse
Somiah M மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் .மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த சகாப்தம் .
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
28-டிச-202115:58:27 IST Report Abuse
Rengaraj எம்.ஜி. ஆர். தனக்கென்று இருந்த ரசிகர்களை தொண்டர்களாக மாற்றிய தலைவர். அதே தொண்டர்களை தனது ஆளுமையின் கீழ் விசுவாசிகளாக கொண்டுவந்தவர் ஜெ என்று சொன்னால் அது மிகையாகாது. . எம்.ஜி. ஆருக்கு பிறகு உடைந்த கட்சியை தனது தலைமைப்பண்பினால் ஒன்றாக்கியவர். ஒரு பெண்ணாக சாதித்தவர். எம்.ஜி.ஆர் தொடர்ந்து பத்தாண்டு ஆட்சியில் இருந்தார். சட்டசபையில் தோல்வி அடையவில்லை. தொண்டர்கள் அவரை விட்டு செல்லவில்லை. ஜெ தோல்வியடைந்தாலும் பிறகு வீறுகொண்டு எழுந்து சாதித்தவர். தோல்வி அடைந்தபோதிலும் தொண்டர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் பத்தாண்டுகள். ஜெ. பதினைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். ஆட்சியில் இல்லாத காலம் பத்தாண்டுகளையும் சேர்த்தால் இருபத்தைந்து ஆண்டுகள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மூன்று ஆண்டுகள். இப்படி இருபத்தெட்டு ஆண்டுகள் தனது தலைமையின் கீழ் ஒரு கட்சியை வழிநடத்தினார். அவர் எதிர்த்து அரசியல் செய்ததோ ஒரு சாணக்யத்தனம் மிகுந்த கருணாநிதி என்ற ஒரு தலைவர். அரசியல் எதிரி என்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ. இந்த இருவரும் எதிர்த்தது ஒருவரைத்தான். தனது தலைமைப்பண்பினால்தான் உண்மையான எம்.ஜி ஆர் ரசிகர்களை தனது விசுவாசிகளாக அவரால் (ஜெ) மாற்ற முடிந்தது. எம்.ஜி.ஆர் போன்று தாய்மார்களை மற்றும் பெண்களை ஈர்த்த அவர்களை மதித்த தலைவர் ஜெ. இன்றும் உண்மையான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இருவரையும் போற்றுகின்றனர். இருவரையும் பிரித்துப்பார்க்கவில்லை. பார்க்கமாட்டார்கள். அதுதான் தலைமைக்கு அவர்கள் தரும் மரியாதை.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
24-டிச-202113:22:50 IST Report Abuse
M.COM.N.K.K. நவீனகால புத்தர் என்றால் அது மக்கள் திலகம் மட்டுமே.ஸ்ரீ ராமபிரானுக்கு நிகராகவே அவரை மக்கள் நேசித்தார்கள் இதுதான் உண்மை. மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கை இன்று வரை யாராலும் இப்புவியில் பெறவே முடியவில்லை பெறவும் முடியாது. அவர் ஒரு தெய்வ பிறவியே உலகம் அழிந்தாலும் அவர் புகழ் ஒருபோதும் அழியவே அழியாது. உயிருடன் பார்த்த ஒரே கர்ணன் மக்கள் திலகம் மட்டுமே.இன்றும் இளைஞர்கள் அவர் பாதையில்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X