அமைச்சர்களுக்கு தி.மு.க., தலைமை எச்சரிக்கை!
''பொது நுாலகத் துறை ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''அவங்களுக்கு என்ன பிரச்னையாம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''கல்வித் துறை இயக்குனர்களே, நுாலகத் துறை இயக்குனர் பொறுப்பையும் கூடுதலா கவனிக்காவ... இதனால, நுாலக துறையில பணிகள் எல்லாம் ரொம்ப மந்தமா நடக்கு வே...
''முதல் நிலை, இரண்டாம் நிலை நுாலகர் பணியிடங்கள் பல வருஷமா காலியாவே கிடக்கு... அதுவும் இல்லாம, பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியல் தயாரா இருந்தும், அதுவும் முடங்கி கிடக்கு வே...
''நுாலகர்களுக்கு தர ஊதிய உயர்வு வழங்க அரசாணை வெளியிட்டும், அது இன்னும் செயல்பாட்டுக்கு வரலை... 1,600 ஊர்ப்புற நுாலகர்கள் 13 வருஷமா பதவி உயர்வும், ரெகுலர் சம்பளமும் இல்லாம தவிச்சிட்டு இருக்காவ...
''இதுக்கெல்லாம் தீர்வு வேணும்னா, நுாலகத் துறையைச் சேர்ந்தவங்களையே இயக்குனர்களா நியமிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''கூட்டணி கட்சியா இருந்தும், அனுமதி கிடைக்கலை பா...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.
''என்ன அனுமதியை சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வலியுறுத்தி, சென்னையில அ.தி.மு.க., சார்புல கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துச்சுல்ல... இதுக்கு பதிலடியா, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்கணும்னு வலியுறுத்தி, சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்புல, எழும்பூர்ல பாதயாத்திரை போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்காங்க பா...
''ஆனா, 'அங்க, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்'னு சொல்லி அனுமதி தர போலீஸ் தரப்புல மறுத்துட்டாங்க...
''இதை ஏற்காத, அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஸ்ரீவல்ல பிரசாத், மாவட்டத் தலைவர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பாதயாத்திரை
போயிருக்காங்க பா...
''அவங்களை போலீசார் தடுக்க, ரெண்டு தரப்புக்கும் கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஆயிடுச்சு... உயர் அதிகாரிகளிடம் காங்கிரஸ் புள்ளிகள் சிலர் பேச, அப்புறமா புதுப்பேட்டை, திருவேங்கடம் தெருவுல ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதி தந்திருக்காங்க பா...''
என்றார் அன்வர்பாய்.
''அவாளே அத்தி பூத்தாப்புல தான் போராட்டம் நடத்துவா... அதுக்கும் பிரச்னை பண்றாளா...'' என சிரித்த குப்பண்ணாவே,
''உங்க இடத்துக்கு வேற ஆள் வந்துடுவான்னு மிரட்டல் விடுத்திருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.
''யாருக்கு, யாருவே மிரட்டல் விடுத்தா...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''தி.மு.க., மாவட்டச் செயலர்கள், எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சமீபத்துல நடந்துதோல்யோ... இதுல, 'கட்சி பதவி, ஆட்சி பதவியில இருக்கற நாம, நிலம் ஆக்கிரமிப்பு, மோசடி குற்றச்
சாட்டுன்னு வம்பு, வழக்குல சிக்கிடப்டாது...
''குறிப்பா, 'அமைச்சர் பதவியில இருக்கறவா, ரொம்ப அடக்கியே வாசிக்கணும்... ஏதாவது ஏடாகூடமா நடந்துண்டா, உங்க பதவியை அலங்கரிக்க நிறைய எம்.எல்.
ஏ.,க்கள் காத்துண்டு இருக்கா'ன்னு, தலைமை நாசுக்கா எச்சரிக்கை விடுத்திருக்காம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE