மதுரை விமான நிலைய விவகாரம்: எம்.பி.,க்கு அமைச்சர் சிந்தியா பதிலடி

Updated : டிச 23, 2021 | Added : டிச 23, 2021 | கருத்துகள் (37)
Advertisement
புதுடில்லி : மதுரை விமான நிலைய விவகாரத்தில் எம்.பி., வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கைக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியாவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேசன், ஒரு மனு
 மதுரை,விமான நிலையம்,சிந்தியா

புதுடில்லி : மதுரை விமான நிலைய விவகாரத்தில் எம்.பி., வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கைக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியாவிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேசன், ஒரு மனு அளித்தார்.கோரிக்கைஅதில், 'மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து வழங்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.


latest tamil news


'பெரும்பாலான வட மாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் மட்டுமே இருப்பதால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது' என மத்திய அமைச்சர் சிந்தியா கூறியதாக, எம்.பி., வெங்கடேசன் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய ஜி.எஸ்.டி., தொகையின் மொத்த அளவை விட, அதிக ஜி.எஸ்.டி.,யை தமிழகம் செலுத்தி உள்ளதாக கூறிய எம்.பி., வெங்கடேசன், தமிழகத்திற்காக நான்கு அல்ல; 14 சர்வதேச விமான நிலையங்களை கேட்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறினார்.இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய அமைச்சர் சிந்தியா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.


புரியவில்லை



அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:உண்மைகளை வெங்கடேசன் மொத்தமாக மாற்றி கூறி உள்ளார். அவரது அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. வட மாநிலமான உத்தர பிரதேசத்திலும், தென் மாநிலமான கேரளாவிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இது, வெங்கடேசனின் அறிக்கை ஆதாரமற்றது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்கு பயணியர் தேவை, அருகில் உள்ள சர்வதேச விமானம் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.மதுரை விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது சர்வதேச அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எம்.பி., வைத்துள்ளது ஏன் என புரியவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
29-டிச-202104:41:57 IST Report Abuse
Natesan Narayanan மதுரை விமானநிலையத்தில் அரபு நாடு விமானம் வந்து போகிறது , பயணிகள் இருந்தால் கட்டாயம் போட்டி போட்டுகொண்டு விமானிகள் வரும் இதனையும் ஜி எஸ் டி வரி சேர்ப்பது சரியல்ல .
Rate this:
Cancel
Nellai Ravi - Nellai,இந்தியா
28-டிச-202111:31:01 IST Report Abuse
Nellai Ravi சர்வதேச விமானங்கள் வந்து போகின்றன. கூட்டம் அதிகரித்தால், மேலும் விமானம் விடுவார்கள். இதில என்ன பிரச்னை ?
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
24-டிச-202120:12:18 IST Report Abuse
Easwar Kamal மதுரைக்கு சர்வதேச விமான நிலயம வேண்டாம்னு சொல்லுற இந பிறவிகள் இங்கே இவளவு பேர் உள்ளனர் நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு எப்போதாவது வந்து போவார் அல்லது மத மாநிலத்தில் இருந்து இங்கே புழைபு நடத்தும் இன பிறவிகள் என்பது நான்றவாகவே தெரிகிறது. நம்மை விட மக்கள் தொகை கமியாக உள்ள கேரளாவுக்கு 4 சர்வ தேச விமான நிலையம் உள்ளது. அதுவும் இந்த மலையாள கூட்டங்கள் முக்கியமாக gulf மட்டும்தான் செல்லும் வேறு எங்கும் செல்வது கிடையாது. இதை எல்லாம் ஒரு இந பிறவி கண்களுக்கு தெறிவது கிடையாது. மதுரை வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு. முன்னாளில் தென்னகத்தில் சென்னை இருந்துதான் அமெரிக்கா/ஐரோப் போன்ற வெளி நாட்டுக்கு செல்ல விமானம் இருக்கும். இப்போது பெங்களூர்/ஹைதெராபாத் போன்ற நகரங்களை சென்னை விட பெரியதாக இந்த மத்தியில் உள்ள அரசாங்கம் அகி விட்டது. இப்படியே எதுவும் கேக்காமல் இருந்தால் சென்னை கூட மதுரை அளவுக்கு தள்ள படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X