கோவை:மழைக்கால மருத்துவ முகாம்களில் இதுவரை, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அதே வேளையில், 'ஒமைக்ரான்' தொற்று வேகமெடுத்து வருவது வேதனைக்குரியது.
தவிர, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.மூன்றாவது கொரோனா அலை எழுந்தால், ஊரடங்குக்கு வழிவகுக்கும் என்பதால் அனைவரும் மாஸ்க் உள்ளிட்ட நோய் தடுப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். மாநகராட்சி நிர்வாகமும், நோய் பரவலை கட்டுப்படுத்த மழைக்கால மருத்துவ முகாம்களை தீவிரப்படுத்தியுள்ளன.கடந்த நவ., 13ம் தேதி மழைக்கால மருத்துவ முகாம் துவங்கிய நிலையில், தினமும், 64 இடங்களில் என இதுவரை, 15 லட்சத்து, 5,312 பேர் பயனடைந்துள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்த முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது பரவிவரும் நோய்களை கட்டுப்படுத்த, முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நவ.,13 முதல் கடந்த, 22ம் தேதி வரை, 2,376 முகாம்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக, 3,390 பேர் இதில் பயன்பெற்றுள்ளனர்.முகாம்கள் வாயிலாக சளி, காய்ச்சல் பாதிப்பு, 1181 பேருக்கும், வயிற்றுப்போக்கால், 580 பேர், பிற நோய்களால், 41 ஆயிரத்து, 227 பேரும் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 893 பேருக்கு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
நிலவேம்பு கஷாயம் ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 479 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொற்றா நோய், 38 ஆயிரத்து, 760 பேருக்கு கண்டறியப்பட்டது. இதில், 29 ஆயிரத்து, 416 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 23 ஆயிரத்து, 702 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். வரும் காலங்களில், தேவைப்படும் பட்சத்தில் தினசரி முகாம்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். நோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement