இது உங்கள் இடம்: இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் ஜெ., மரண மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாது

Added : டிச 24, 2021 | கருத்துகள் (76)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கி.ரமேஷ், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனை ஞாபகம் இருக்கிறதா? தற்போதைய அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்?அட, அ.தி.மு.க., பிரமுகர் பாலனையாவது நினைவிருக்கிறதா? அவர்கள் யாரும் அனாமதேயர்கள் அல்லர்; மிகவும் பிரபலமானோர்.
ADMK, Jayalalithaa, Arumugasamy Commission, Apollo Hospital, Jayalalithaa death probe


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

கி.ரமேஷ், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனை ஞாபகம் இருக்கிறதா? தற்போதைய அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்?அட, அ.தி.மு.க., பிரமுகர் பாலனையாவது நினைவிருக்கிறதா? அவர்கள் யாரும் அனாமதேயர்கள் அல்லர்; மிகவும் பிரபலமானோர். கட்சி பின்புலம் உள்ளோர்.அந்த மூவரில் இருவர் கொலை செய்யப்பட்டனர்; ஒருவர், 'பெர்முடாஸ்' முக்கோணத்தில் மாயமாய் மறையும் விமானங்கள் மாதிரி, மர்மமான முறையில் காணாமல் போனவர்.

சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு, 2,753 சதுர அடி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதில் நீதிபதி விசாரணை நடத்துவதற்கான சேம்பர் அறை, 702 சதுர அடியில் அமைக்கப்பட்டு வருகிறதாம். இது மட்டுமின்றி நீதிபதி ஓய்வறை, அலுவலகம், விசாரணைக்கு வருவோர் காத்திருக்கும் அறை உள்ளிட்டவையும் அமைக்கப்படுகிறதாம்.

அனேகமாக, ஆங்கில புத்தாண்டு தினத்தை ஆறுமுகசாமி கமிஷன் இந்த புதிய விசாரணை அறையில், 'கேக்' வெட்டி கொண்டாடும்.எழுதி வைத்து கொள்ளுங்கள்... இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும், ஆறுமுகசாமி கமிஷனால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாது; ஒரு குற்றவாளியையும் கண்டறிய முடியாது!


latest tamil newsசிவாஜிகணேசன் நடித்து, தாதாமிராசி இயக்கத்தில் வெளியான, புதிய பறவை படம் நினைவிருக்கிறதா? அதில் தன் மனைவி சவுகார் ஜானகியை கொலை செய்திருப்பார், சிவாஜிகணேசன்.அதற்கு ஆதாரமே கிடைக்காது. குற்றவாளியே, 'நான் தான், என் மனைவியைக் கொலை செய்தேன்' என, வாக்குமூலம் அளிப்பதோடு படம் முடியும்.அதுபோல, ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானோர், தாமே முன்வந்து, 'நாங்கள் தான் கொலை செய்தோம்' என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி சரணடைந்தாலன்றி, ஆறுமுகசாமி விசாரணை கமிஷனால் ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல முடியாது.

இத்தனை ஆண்டு விசாரணையில், அந்த கமிஷன் என்ன பெரிதாக கண்டுபிடித்து விட்டது? காலத்திற்கும், அரசு பணத்திற்கும் பிடித்த கேடு, இந்த விசாரணை கமிஷன்! வீண் விரயம் செய்யாமல், தா.கிருஷ்ணன், ராமஜெயம், பாலன் ஆகியோர் வரிசையில், ஜெயலலிதாவையும் சேர்ந்து கொள்வது நலம்.

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
27-டிச-202110:30:03 IST Report Abuse
W W இதில் மாஸ்டர் மயின்ட் யார் யார் என்பது ஒரு சிலருக்கு (பலருக்கு ) தெரியும் அதனால் பலன் அடைந்தவர்கள் பலர் ( பலன் அடைநந்தவர்கள் அவர்களுக்கு V . VIP அந்தஸ்து கொடுத்து யரும் அறியாமல் போற்றபடுவார்கள்) மக்களை முட்டாள் ஆக்குகிறர்கள் .CBI எற்றெடுத்து ஆவன செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Dr SS - Chennai,இந்தியா
26-டிச-202107:21:44 IST Report Abuse
Dr SS உலக அளவில் இம்மாதிரி பல . அவைகளோடு இதுவும் ஒன்று
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
24-டிச-202121:28:19 IST Report Abuse
Vena Suna அப்போல்லோ ஆஸ்பத்திரி எல்லா சி சி டீ வீ காமிராக்களையும் அணைத்து வைத்தது மர்மத்துள் மர்மம்.மட்டமான ஆஸ்பத்திரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X