ஒமைக்ரான் 'ஓல்டு'; புதுசா மிரட்ட வருது 'டெல்மைக்ரான்' வைரஸ்

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (23) | |
Advertisement
மும்பை: ஒரு பக்கம் 'டெல்டா' வகை கொரோனா வைரஸ், மறுபக்கம் 'ஒமைக்ரான்' வகை வைரஸ் தொற்று பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக இவை இரண்டும் கலந்த 'டெல்மைக்ரான்' வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.அபாயம்:அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் டெல்டா வகை வைரஸ் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே தென்
Delmicron, Delta, Omicron

மும்பை: ஒரு பக்கம் 'டெல்டா' வகை கொரோனா வைரஸ், மறுபக்கம் 'ஒமைக்ரான்' வகை வைரஸ் தொற்று பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக இவை இரண்டும் கலந்த 'டெல்மைக்ரான்' வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.


அபாயம்:


ஒமிக்ரான் ஓல்டு புதுசா மிரட்ட வருது டெல்மிக்ரான் | New Virus | Delmicron Varient | Covid19

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் டெல்டா வகை வைரஸ் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே தென் ஆப்ரிக்காவில் தென்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன.

இது போதாதென்று தற்போது புதிதாக டெல்மைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஏற்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அதாவது டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகள் கலந்ததாக இந்த புதிய வகை உள்ளது. அதனால் பெரிய அளவில் பாதிப்புடன், வேகமாகவும் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருவதால், 'பூஸ்டர் டோஸ்' வழங்கும் நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுஉள்ளன.கூடுதல் 'டோஸ்'


'ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கு கூடுதல் டோஸ் வழங்குவதைவிட, உலகெங்கும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை பணக்கார நாடுகள் உறுதி செய்ய வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் இதுவரை 16 மாநிலங்களில் 236 பேருக்கு, ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 104 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 65 பேரும், டில்லியில் 64 பேரும் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
04-ஜன-202210:47:58 IST Report Abuse
Godyes கொரோனா சீனா வூகான் டெல்ட்டா பிளஸ் தென் ஆப்ரிக்கா கோவிட் 19 சைனா ஓமைக்ரான் அமெரிக்கா.இப்போது டெல்ட்ரான் ஆப்ரிக்கா அமெரிக்கா. நல்ல வேளை இந்தியாவில் இது வரை எந்த வைரஸும் தோன்ற வில்லை. வெளி நாட்டுக்காரன்கள் பரவ விடும் வைரஸ் தொடர் தொற்றை இந்தியா தடுத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து இறைவன் இந்தியாவை அழிக்காமல் உலகத்தை முழுமையாக அழிக்கப்போகிறான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசிய பகுதியுடன் சேர்ந்த ஆப்ரிக்க கோண்ட்வானா என்ற தென்னிந்திய பகுதியும் அது இணைந்த மத்திய ஆசிய பகுதியும் தனியாக இப்பூமியிலிருந்து கழன்று தனி கிரகமாக மாறும். இந்தியா ஒரு தனி கிரகமாகும். அது அழியாது. சிதையாது. இந்திய கலாச்சாரம் உலகில் சிறந்தது. ஆண்டவன் கணக்கில் வைத்து இந்தியரை மட்டும் உலக பேரழிவிலிருந்து காப்பாற்றுவது நிச்சயம் நடக்கும்.
Rate this:
Cancel
Sankaran - chennai,இந்தியா
24-டிச-202115:38:34 IST Report Abuse
Sankaran ஜீசஸ் சேவ்ஸ் என்று மத மாற்றம்...எங்கே ஓடி ஒளிந்து உள்ளார் அந்த ஜீசஸ்....
Rate this:
Pandi Muni - Johur,மலேஷியா
24-டிச-202118:16:48 IST Report Abuse
Pandi Muniஇவ்வளவு பாவாடையை எங்கே சேவிங் பண்றது. கோரோனோ கொண்டுபோகட்டும் மிச்ச மீதியை பாக்கலாமுன்னு வரலாம்....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
24-டிச-202114:56:47 IST Report Abuse
Visu Iyer இந்த வைரஸ் சாப்ட்வேரை அழிக்குமா ...? ஹார்டுவேரை அழிக்குமா....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X