ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார்

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
சாத்தூர்: வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்தி ரபாலாஜி மீது ரவிச்சந்திரன், விஜய், நல்லத்தம்பி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறி, பணம் வாங்கி மோசடி செய்ததாக, புகார் அளித்தனர். இதில், ராஜேந்திர பாலாஜி உட்பட ஐந்து பேர்
ராஜேந்திர பாலாஜி,  பண மோசடி, புகார்

சாத்தூர்: வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்தி ரபாலாஜி மீது ரவிச்சந்திரன், விஜய், நல்லத்தம்பி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறி, பணம் வாங்கி மோசடி செய்ததாக, புகார் அளித்தனர். இதில், ராஜேந்திர பாலாஜி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில், முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் தலைமறைவானார். உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அங்கும் விசாரணைக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனி படைகளின் எண்ணிக்கை எட்டாக உயர்த்தப்பட்டது.தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க போலீஸ் தரப்பில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில். ராஜேந்திர பாலாஜி மீது மற்றொரு பண மோசடி புகார் எழுந்துள்ளது. சாத்தூரில் சத்துணவில் வேலைவாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. விருதுநகர் எஸ்.பி.,க்கு வந்த இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24-டிச-202117:59:12 IST Report Abuse
கல்யாணராமன் சு. யாருக்குமே முன் ஜாமீன் கொடுப்பதற்கு முன்னால், அவர்கள் (அவர்களது வழக்கறிஞர் அல்ல) நீதி மன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று விதி வரவேண்டும். தலைமறைவாக இருந்துகொண்டு முன் ஜாமீன் கேட்பவர்களுக்கு முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது....
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
24-டிச-202116:32:57 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam திமுக தில்லுமுல்லு கழகம் மட்டுமல்ல, அது ஒரு திருந்தாத முரட்டுக் கழகம் என்பது உறுதியாகிவிட்டது. எப்படிச் சோனியா காந்தி அவர்களை காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்திக் கொண்டார்களோ அதேபோன்று, ஸ்டாலின் அவர்களை சாதீய அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள். எனவே, முதுகெலும்புள்ள தலைமை திமுகவுக்குத் தேவை. தமிழகம் வேற்று மொழியாளர்களின் கையில் சிக்க, தமிழ் இனம் பரதேசிகளாக பிற மாநிலங்களுக்குப் போகும் நிலை ஏற்படும்.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
24-டிச-202116:20:11 IST Report Abuse
M.COM.N.K.K. நமது அரசியல் கட்சிகளிடம் பழிவாங்கும் எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது இன்று இவருக்கு நாளை அவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்வதை விட்டு இப்படி செய்வது கொஞ்சமும் நன்றாக இல்லை.ஊழல் பெருச்சாளிகள் இங்கேயும் உள்ளார்கள் எல்லாம் மக்களுக்கு தெரியும். குற்றம் செய்பவர்கள் எப்போதும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.அதற்காக தங்களிடம் உள்ள ஊழலை மறைத்து அடுத்தவர்களுடைய ஊழலை பெரிதுபடுத்துவதுதான் வேதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X