சாத்தூர்: வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பண மோசடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்தி ரபாலாஜி மீது ரவிச்சந்திரன், விஜய், நல்லத்தம்பி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக கூறி, பணம் வாங்கி மோசடி செய்ததாக, புகார் அளித்தனர். இதில், ராஜேந்திர பாலாஜி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில், முன்ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் தலைமறைவானார். உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அங்கும் விசாரணைக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனி படைகளின் எண்ணிக்கை எட்டாக உயர்த்தப்பட்டது.தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க போலீஸ் தரப்பில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில். ராஜேந்திர பாலாஜி மீது மற்றொரு பண மோசடி புகார் எழுந்துள்ளது. சாத்தூரில் சத்துணவில் வேலைவாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. விருதுநகர் எஸ்.பி.,க்கு வந்த இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE