வெள்ளி முதல் வியாழன் வரை ( 24.12.2021 - 30.12.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
சந்திரன், புதன். குரு சாதக நிலையில் உள்ளனர். முருகர் வழிபாடு நலம் அளிக்கும்.
அசுவினி: உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீர வாய்ப்பு உள்ளது. அவர்களை அனுசரித்துப்போய் ஆசி பெறுவீர்கள். புதிய நட்புகளை நம்பிப் பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.
பரணி:விலையுயர்ந்த ஆபரணங்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். யாரையும் அலட்சியமாக நடத்த வேண்டாம். ஆசிரியர் பணியில் உள்ளவர்களை மதித்து அவர்களால் நன்மையடைவீர்கள்.
கார்த்திகை 1ம் பாதம்:கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றாதபடி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் நன்மைகளையும் லாபத்தையும் எதிர்பார்க்கலாம். பயணம் முடிவாகி மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்
சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. குருவாயூரப்பன் வழிபாடு சுபிட்சம் தரும்.

கார்த்திகை 2,3,4: புதிய மனிதர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சி கூடும். கடந்தவாரங்களில் ஏற்பட்ட சிரமங்கள் அகலும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும், பக்கத்துவீட்டார்களிடம் ஒன்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி: நண்பர்கள், சகோதரரால் உங்கள் பிரச்னைகள் தீர ஆரம்பிக்கும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் செய்வீர்கள். உறவினரிடையே உங்கள் கை ஓங்கும். சிறப்பான சாதனைகள் செய்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் இருந்த மனவருத்தம் ஒன்று நீங்கும். அண்டைவீட்டாருக்கு உதவுவீர்கள். சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் யோசித்து முடிவு எடுங்கள். குடும்பத்தினரின் போக்கு இனிமையாக இருக்கும்.
மிதுனம்
குரு, ராகு, கேது, புதன் அபரமித நன்மைகளைத் தருவர். ராமர் வழிபாடு கஷ்டம் நீக்கும்.
மிருகசீரிடம் 3,4: உழைப்பினால் வெற்றி பெறுவீா்கள். கடந்த காலக் கவலைகள் நீங்கி மனதில் நிம்மதி மேலோங்கும். வெளிநாட்டுப் பயணம் முடிவாகி மகிழ்ச்சியளிக்கும்.
திருவாதிரை: கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கும். மகனின் எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். உறவினர், நண்பர்களுக்குக் கொடுத்த கடன் வசூலாகும்.
புனர்பூசம் 1,2,3: சண்டை சச்சரவுகளில் சற்று விலகி நிற்பது நன்மை தரும். ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துங்கள். எதையும் உற்சாகமாகச் செய்வீர்கள். மேலதிகாரி அல்லது ஆசிரியரின் பிடிவாதம் தளரும்.
கடகம்
சுக்கிரன், சந்திரன், ராகு நற்பலன்களைத் தருவர். குரு வழிபாடு துயர் போக்கும்.
புனர்பூசம் 4: சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். மூத்த சகோதரர்களுக்கு ஏற்பட்ட தடைகள் உங்கள் உதவியால் விலகும். நீண்ட நாட்களாக வாய்ப்புக்குக் காத்திருந்தவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வரும்.
பூசம்: மனசஞ்சலங்கள் உண்டாகும் போது, அமைதியாகச் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பொது விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும்
ஆயில்யம்: பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உங்கள் போக்கில் மாற்றம் நன்மை காண்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் நல்லவர்கள் வழிகாட்டுவர்.
சிம்மம்
குரு, சனி, புதன், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவர். முருகன் வழிபாடு அல்லல் தீர்க்கும்.

மகம்: சில்லறை செலவுகள் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளை அடக்கமாக நடத்தி மகிழ்வீா்கள். குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். வியாபாரிகள் தங்கள் ஊழியா்களிடம் சுமுகமாகப் பழகவும்.
பூரம்: பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளைக் குறைத்து நிம்மதி காண்பீர்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவது பற்றி யோசிப்பீர்கள்.
உத்திரம் 1: பணவிஷயத்தில் முழுமையான அனுகூலத்தை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்திருந்த பணவரவு சற்று தாமதமாகும். தொழிலில் சங்கடம் ஏற்பட்டாலும் பின்னர் நன்மை உண்டாகும்.
கன்னி
சந்திரன் புதன், சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். அனுமன் வழிபாடு வளம் தரும்.
உத்திரம் 2,3,4: காணாமல் போன விலையுயர்ந்த பொருள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை துாண்டலாம். குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
அஸ்தம்: சகோதரர்கள் அல்லது சகோதரிகளுக்கு உதவி செய்விர்கள். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். சகஊழியர்கள் உங்களுக்கு எதிராகச் செய்யும் விஷயம் பலிக்காது.
சித்திரை 1,2:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். பணிச்சுமை அதிகரித்தாலும் அநாயாசமாகச் சமாளிப்பீர்கள்.
துலாம்
குரு, புதன், சந்திரன் கூடுதல் நற்பலன் தருவர். விநாயகர் வழிபாடு வெற்றி அளிக்கும்.
சித்திரை 3,4: உடன்இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்காலத்தில் உதவக்கூடிய அனுபவம் உண்டாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் மனவருத்தம் நீங்கும்.
சுவாதி: அக்கம்பக்கத்தினரின் உதவியால் ஒரு கஷ்டத்திலிருந்து மீளுவீர்கள். எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். மேலதிகாரிக்கு உங்கள் மேல் இருந்த நல்ல அபிப்ராயம் கூடும்.
விசாகம் 1,2,3: பணவரவு சிறப்பாக இருக்கும். கடந்த வாரம் துவங்கிய முயற்சி நிறைவேறும். பல நாள் தேவை ஒன்று நிறைவடையும். கடன் குறையும். பணியிடத்திலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.
விருச்சிகம்
குரு, சந்திரன், சனி, புதன் நல்ல பலனைத் தருவர். சூரியனார் வழிபாடு செல்வம் தரும்.
விசாகம் 4: வியாபாரத்தில் / தொழிலில் லாபம் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. முயற்சிகளில் சிறுதடை உண்டாகி உடனே விலகும்.
அனுஷம்: பணியிடத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணிமாற்றம் பற்றிய சிந்தனை இப்போது வேண்டாம் . பணவிவகாரத்தினால் வந்த சிக்கல்கள் அகலும்.
கேட்டை: எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத்தன்மை தேவைப்படும். நண்பர்களுக்கு உங்களால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்ததற்கு மேல் வருமானம் வரும். கடன் குறையும்.
தனுசு
சந்திரன், ராகு, கேது தாராள நன்மைகளை வழங்குவர். ராமர் வழிபாடு நன்மை தரும்.
மூலம்: அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பாடுபட வேண்டியிருக்கும். உரிய மருத்துவத்தால் தாயின் உடல்நிலை சீராகும். செல்வசேர்க்கை உண்டாகும்.
பூராடம்: ஆடம்பரப் பொருட்கள் வாங்க அதிகம் செலவு செய்ய வேண்டாம். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிறு சந்தோஷ மாற்றமும் ஏற்றமும் வரும்.
உத்திராடம்,1:கூடுதலாகப் பணியாற்றுவீர்கள். நன்மைகள் கிடைப்பதற்குச் சற்று அதிகப் பாடுபட வேண்டியிருக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். பொறுமையும் நிதானமும் இருந்தால் பிரச்னை வராது.
மகரம்
சுக்கிரன், கேது, செவ்வாயால் நலன்கள் கிடைக்கும். அனுமார் வழிபாடு அமைதி தரும்.
உத்திராடம் 2,3,4: உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. சில நன்மைகள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செனறால் கவலை வேண்டாம். அது நன்மைக்கே. பலகாலம் வந்த பிரச்னை ஒன்று தீரும்
திருவோணம்: வெளிநாட்டு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம்.
அவிட்டம் 1,2: எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும். அனுபவசாலிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொதுசேவைகளை முன்னின்று நடத்துவீர்கள். கவனமாக இருந்தால் பிரச்னை இருக்காது.
சந்திராஷ்டமம்: 23.12.2021 இரவு 1:05 மணி - 26.12.2021 காலை 8:09 மணி
கும்பம்
சூரியன், செவ்வாய், குருபார்வையால் நன்மை கிடைக்கும். சிவன் வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3,4: தேவையற்ற பொருள் வாங்குவதால் வீண்செலவு ஏற்படலாம். பொறுப்பான துறையில் பணிபுரிபவர்கள் அதிக வேலைப்பளு காரணமாக சிரமத்திற்கு ஆளாவீர்கள்.
சதயம்: நினைத்ததை நடத்தி முடிக்க நெருங்கிய நண்பர் கைகொடுப்பார். வாய்ப்புகள் வருவதில் சிறு தாமதம் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் ஒருவர் போக்கினால் கவலை உண்டாகி நீங்கும். ஆரோக்கிய தொல்லை ஏற்பட்டு மறையும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 26.12.2021 காலை 8:10 மணி - 28.12.2021 மதியம் 12:54 மணி
மீனம்
புதன், சுக்கிரன், சனி அமோக நற்பலன்களை அளிப்பர். குரு வழிபாடு வினை தீர்க்கும்.
பூரட்டாதி 4: எதையும் நிதானித்து செய்வதால் நன்மை அடைய முடியும். நல்ல நோக்கத்துடன் நீங்கள் எடுக்கும் முடிவுகள் கூட மற்றவர்களால் விமர்சிக்கப்படலாம்.
உத்திரட்டாதி: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். . பழைய பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வந்து மனதில் நிம்மதி ஏற்படும். வியக்க வைக்கும் செய்திகள் வரும்.
ரேவதி: சொற்களைக் கையாளுவதில் மிகுந்த கவனம் தேவை. தாயாருக்கு நன்மை ஒன்று நிகழும். வாகனம், வீடு வாங்குவதில் முன்னேற்றமான காலம் இது. வாய்ப்புகளும், வருமானமும் வரும். தடை தாமதங்கள் இருக்கலாம்.
சந்திராஷ்டமம்: 28.12.2021 மதியம் 12:55 மணி - 30.12.2021 மாலை 4:05 மணி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE