குன்னுார்: குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து, கனரக பாகங்களை ஹெலிகாப்டரில் எடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பாசத்திரம் பகுதியில், டிச., 8ல் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 14 பேர் உயிரிழந்தனர். எரிந்து சிதைந்த ஹெலிகாப்டரின் சிறிய பாகங்கள், லாரிகளில் ஏற்றி, கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

இன்ஜின் உட்பட பிற பெரிய பாகங்களை, சாலை அமைத்து கிரேன் வாயிலாக கொண்டு செல்ல ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கான பணிகளில், தாமதம் ஏற்படும் என்பதால், ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதில், கோவை விமான படையில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைத்து, ரோட்டார் மற்றும் கனரக இயந்திரங்களை துாக்கி செல்வது குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE