கனரக பாகங்கள் மீட்க ஹெலிகாப்டர்; ராணுவ அதிகாரிகள் ஆலோசனை| Dinamalar

கனரக பாகங்கள் மீட்க ஹெலிகாப்டர்; ராணுவ அதிகாரிகள் ஆலோசனை

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (1) | |
குன்னுார்: குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து, கனரக பாகங்களை ஹெலிகாப்டரில் எடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பாசத்திரம் பகுதியில், டிச., 8ல் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 14 பேர் உயிரிழந்தனர். எரிந்து சிதைந்த ஹெலிகாப்டரின் சிறிய பாகங்கள்,

குன்னுார்: குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து, கனரக பாகங்களை ஹெலிகாப்டரில் எடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.



latest tamil news



நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பாசத்திரம் பகுதியில், டிச., 8ல் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 14 பேர் உயிரிழந்தனர். எரிந்து சிதைந்த ஹெலிகாப்டரின் சிறிய பாகங்கள், லாரிகளில் ஏற்றி, கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.


latest tamil news



இன்ஜின் உட்பட பிற பெரிய பாகங்களை, சாலை அமைத்து கிரேன் வாயிலாக கொண்டு செல்ல ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கான பணிகளில், தாமதம் ஏற்படும் என்பதால், ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதில், கோவை விமான படையில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைத்து, ரோட்டார் மற்றும் கனரக இயந்திரங்களை துாக்கி செல்வது குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X