பனிப்பொழிவு அதிகரிப்பு: கேரட், பீன்ஸ் விலை எகிறியது!

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
கோவை: பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் கேரட், பீட்ருட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி விலை கிலோ நுாறு ரூபாயை எட்டிப்பிடித்தது.கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் விளையும், கேரட், பீன்ஸ், பீட்ருட் போன்ற காய்கறி விளைச்சல் குறைந்திருப்பதால், அதன் விற்பனை விலை பல மடங்கு

கோவை: பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் கேரட், பீட்ருட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி விலை கிலோ நுாறு ரூபாயை எட்டிப்பிடித்தது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் விளையும், கேரட், பீன்ஸ், பீட்ருட் போன்ற காய்கறி விளைச்சல் குறைந்திருப்பதால், அதன் விற்பனை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.



latest tamil news




கேரட், 88 க்கும், பீன்ஸ், 70 ரூபாய்க்கும், பீட்ருட் 85 க்கும், டர்னிப், நுால்கோல் 70 க்கும், உருளை கிழங்கு 60 க்கும் நேற்று ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விற்பனையானது.மலைப்பகுதியில் விளையும் காய்கறி அல்லாமல், நிலப்பகுதியில் விளையும் காய்கறி சிலவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
அவரைக்காய், 70 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 55க்கும், புடலை 42க்கும், கொத்தவரை, 60 க்கும், பாகற்காய், 53க்கும், காலிபிளவர் 65 க்கும் விற்பனையானது.


latest tamil news





வியாபாரிகள் கூறுகையில், 'உழவர் சந்தையில் மட்டும் தான் கேரட் 88 க்கும், பீட்ருட் 85 க்கும் விற்றது. டி.கே.மார்க்கெட் மற்றும் அண்ணா மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் நுாறு ரூபாயை கடந்து விட்டது. பனிப்பொழிவால் ஊட்டி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் இங்கிலீஷ் காய்கறி வரத்து குறைந்துள்ளது.
கிலோ, 120 க்கு விற்ற தக்காளி தற்போது குறைந்து கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் சூழலில் கேரட், பீட்ருட், பீன்ஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்திருப்பது, மக்களை கவலை அடையச்செய்துள்ளது' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
24-டிச-202114:01:39 IST Report Abuse
raja விடியாத இந்த ஆட்சிக்கு இப்போ பனி கூட சாக்கு சொல்ல உதவுது... எப்படியோ திமுக வியாபார சங்க எம் எல் எ வால மக்கள் வயிற்றில் அடித்து கொள்ளை அடிக்கிறானுவோ கேடுகெட்ட விடியல் ஆட்சியில்......விக்கிரமா... தர்மமா?....கேரட்டு கிலோ 100, தக்காளி கத்திரிக்கா விலை கிலோ 300, முருங்கைக்காய் கிலோ 400, சிமெண்ட் , கம்பி செங்கல், மணல் வில்லை ராக்கெட்டு வேகத்துல எகிறிக்கிட்டு இருக்கு... ஐயகோ எனதருமை தமிழனே... இந்த தெலுங்கநும் அவர்கள் கூட்டமும் நல்லது செய்வான்னு நம்பிட்டேயே ....
Rate this:
Cancel
24-டிச-202110:55:44 IST Report Abuse
ஆரூர் ரங் வீட்டை சுற்றி சிறு தோட்டம் வைத்திருந்த பலர் அவற்றை அழித்து🤯 கார் ஸ்கூட்டர் பார்க்கிங் ஆக்கிவிட்டார்கள். இப்போ வெளியில் நூறு ரூபாய்க்கு காய்கறிகள் வாங்கும்😥 போது வருத்தப்பட்டு என்ன பயன்? இது போன்ற விலை உயர்வாவது இயற்கை வழி மாடித் தோட்டங்களை அமைக்க கட்டாயப் படுத்தட்டுமே
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-டிச-202113:20:01 IST Report Abuse
Dhurveshநல்லவேளை இந்த பெரிசு இதற்கும் ஸ்டாலின் என்று புலம்பி இருக்கும், நல்ல வேலை பனிப்பொழிவு பொறுப்பேற்று விட்டது...
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
24-டிச-202110:52:44 IST Report Abuse
Vittalanand எதாவது சொல்லி விலை ஏற்றுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X