மாணவியர்களை மிரட்டிய மாணவன் கொன்று புதைப்பு; 9 மாணவர்கள் கைது

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: ஆபாச பேச்சு உரையாடலை பதிவு செய்து மாணவியரை மிரட்டி பணம் பறித்த கல்லுாரி மாணவன் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டான். இந்த வழக்கில், மூன்று மாணவியர் உட்பட ஒன்பது பேரை போலீசார் நேற்று (டிச.,23) கைது செய்து உள்ளனர்.தாம்பரம் அருகே, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்தவர் பிரேம்குமார், 21. மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., தத்துவவியல் இறுதி ஆண்டு
ஆபாச பேச்சு, மாணவன் கொலை, கைது, மாணவியர்

சென்னை: ஆபாச பேச்சு உரையாடலை பதிவு செய்து மாணவியரை மிரட்டி பணம் பறித்த கல்லுாரி மாணவன் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டான். இந்த வழக்கில், மூன்று மாணவியர் உட்பட ஒன்பது பேரை போலீசார் நேற்று (டிச.,23) கைது செய்து உள்ளனர்.

தாம்பரம் அருகே, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்தவர் பிரேம்குமார், 21. மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., தத்துவவியல் இறுதி ஆண்டு மாணவன். டிச.,17ல் கும்மிடிப்பூண்டி அருகே, ஈச்சங்காடு கிராமத்தில், வெட்டி கொலை செய்து புதைக்கப் பட்டார். இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், கொலை செய்யப்பட்ட பிரேம்குமார், பதினைந்து வயதுடைய இரு பள்ளி மாணவியருடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களுடன் ஆபாசமாக பேசிய உரையாடலை பதிவு செய்துள்ளார். அதை வைத்து மாணவியரை மிரட்டி, பணம் பறித்துள்ளார்.

ஒரு கட்டத்தில், பிரச்னையில் இருந்து விடுபட, 17 வயதுடைய கல்லுாரி மாணவியின் உதவியை, பள்ளி மாணவியர் நாடியுள்ளனர். இன்ஸ்டாகிராம் நண்பரான கும்மிடிப்பூண்டி அடுத்த, நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், 21, என்பவரை கல்லுாரி மாணவி தொடர்பு கொண்டு உதவி கோரினார். உரையாடல் பதிவு செய்துள்ள அலைபேசியை பெற்று தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து, பள்ளி மாணவியரை வைத்து, தந்திரமாக நாடகமாடிய அசோக், டிச.17 மாலை, பிரேம்குமாரை செங்குன்றம் சுங்கச்சாவடிக்கு வரவழைத்தான்.


latest tamil news


மாணவியரை வீட்டிற்கு அனுப்பி வைத்து, அசோக் மற்றும் அவனது கூட்டாளிகளான, செங்குன்றம் லெவின், 22, ஜெகநாதபுரம் தமிழ் என்கிற பிரவின்குமார், 21, நெடுவரம்பாக்கம் ஜெகநாதன், 20, ஸ்டீபன், 21, ஆகியோர் பிரேம்குமாரை, டூ - வீலரில் கடத்தி சென்றனர். பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு கொண்டு சென்று இரவு வரை பலமாக தாக்கினர். அதன்பின், அசோக்கும், லெவினும், பிரேம்குமாரை ஒரு டூ - வீலரில் ஏற்றிக் கொண்டு கும்மிடிப்பூண்டி அருகே, ஈச்சங்காடு கொண்டு சென்றனர்.

அந்த இடத்தில், ஈகுவார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் என்கிற மோசஸ், 28, என்பவரை வரவழைத்தனர்.அசோக், லெவின், மோசஸ் இணைந்து பிரேம்குமாரை வெட்டி கொலை செய்து புதைத்து சென்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பிரேம்குமாரை கொலை செய்த வழக்கில் பதிவான வாக்குமூலத்தின் அடிப்படையில், அசோக், லெவின், பிரவின்குமார், ஜெகநாதன், ஸ்டீபன், மோசஸ், இரு பள்ளி மாணவியர், கல்லுாரி மாணவி என, மொத்தம் ஒன்பது பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gobathy - paris,பிரான்ஸ்
30-டிச-202114:26:56 IST Report Abuse
gobathy ஒரு வேலை போலீஸ் மீதும் நீதி மன்றங்கள் மீதும் நம்ம்பிகை இல்லை போலும்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-டிச-202107:02:31 IST Report Abuse
NicoleThomson தமிழகத்தின் அடுத்த ஜெனரேஷன் எங்கே போகின்றார்கள் என்பதனை தமிழக RSB ஊடகங்கள் முடிவு செய்கின்றனர்
Rate this:
Cancel
SIVA - chennai,இந்தியா
26-டிச-202120:55:38 IST Report Abuse
SIVA எதாவது ஒரு பிரச்சனைன்னு கோர்ட் வரைக்கும் போய் பாருங்க அப்ப தெரியும், அதற்காக இவங்க செய்தததும் தவறு தான், ஆசிரியர் மீது மரியாதையும் போலீஸ் மீது பயமும் இல்லை என்றால் அது சமூகத்திற்கு நல்லதல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X