கோவை: மறைந்த நம் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின்ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, 16 நாள் திதி தர்ப்பணம், நேற்று நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள படித்துறையில் நடைபெற்றது.

பட்டாச்சாரியார் வரதராஜன், குலசேகர ராமானுஜம் ஆகியோர், 16ம் நாள் ஈமக்கிரியைகளை சாஸ்திர சம்பிரதாயப்படி நிறைவேற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது. அவர்கள் கூறியதாவது: இது போன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்கவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், வைகுண்ட பிராப்தியடையவும் இயற்கையும் இறைவனும் அனைவரையும் பாதுகாப்பதற்காகவும், 16ம் நாள் திதி காரியங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெருந்தலைவர்கள், நாட்டை வழிநடத்தும், ராணுவ தளபதிகளுக்கு ஹிந்து தர்மத்தில் தொன்றுதொட்டு இந்நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் தேசத்தின் நலன் கருதி, நொய்யல் ஆற்றங்கரையில் இன்று காரியங்களை நிறைவேற்றினோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE