சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஒமைக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் நலமடைய 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டது. தொடர்ந்து, ம.பி., மற்றும் உ.பி., மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் பவரலை தடுப்பது குறித்தும், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE