மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டல்: 5 பேர் கைது

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் பேரணியின் போது கார் மோதியது மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்
arrest, blackmail, MoS,  AjaiMisraTeni, DelhiPolice, AjaiMisra, Ashish Misra,farmers, Lakhimpur Kheri.

புதுடில்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 5 பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் பேரணியின் போது கார் மோதியது மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். விவசாயிகள் மீது கார் மோதிய விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவை உ.பி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் அஜய் மிஸ்ரா மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. ஆனால், பா.ஜ., மேலிடம் இதனை நிராகரித்து விட்டது.


latest tamil news


இந்நிலையில், அஜய் மிஸ்ராவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 5 பேரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவரது உதவியாளரிடம் பணம் கேட்டு மொபைல் போன் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் நொய்டாவை சேர்ந்த 4 பேர் மற்றும் டில்லியை சேர்ந்த ஒருவர் என 5 பேரை பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-டிச-202118:22:27 IST Report Abuse
பேசும் தமிழன் அட பப்பு அவன் பையன் ஓட்டிய கார் மோதி (ரோட்டின் முறுக்கே போய் வண்டியை மறித்தார்கள் என்பது வேறு விஷயம்) சிலர் இறந்தவர்கள் என்பதற்கு அவரின் அப்பா பதவி விலக வேண்டும் என்றால்.... லட்சக்கணக்கான ஈழத்து தமிழ் பெண்கள் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு உன் அப்பா காரணமாக இருந்தார்.... அதற்காக உன்னை கைது செய்தால் சரியாக வருமா??? உனக்கு சுய புத்தியும் இல்லை... சொல் புத்தியும் இல்லை....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
24-டிச-202117:13:44 IST Report Abuse
DVRR என்னடா இன்னும் இது நடக்கவில்லையே என்று பார்த்தேன் ???பணம் அவசியமான ஒன்று ஆகவே தான் இந்த மாதிரி விவசாயிகள்????????செய்கின்றார்கள் அப்படித்தானே??அது தான் atm மெஷினையே தூக்கிக்கொண்டு செல்கின்றார்கள் இன்றைய சுட சுட செய்தி, வீட்டில் அல்லது பட்டறையில் சென்று நிதானமாக உடைக்கலாம் என்று
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
24-டிச-202115:03:28 IST Report Abuse
தமிழ் மைந்தன் தமிழக விடியல் டெல்லியில் வந்ததா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X