எம்.ஜி.ஆர்.,சமாதியில் 34 வருடமாக அஞ்சலி செலுத்தும் ரசிகர்.| Dinamalar

எம்.ஜி.ஆர்.,சமாதியில் 34 வருடமாக அஞ்சலி செலுத்தும் ரசிகர்.

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (28) | |
துாத்துக்குடி உப்பளத் தொழிலாளியான ஜெயச்சந்திரன்,கடந்த 34 வருடங்களாக சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்.,நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.எம்.ஜி.ஆரின் 34 வது வருட நினைவு தினமான நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏாராளமான பொதுமக்களும்,பிரமுகர்களும்,அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.ஒரு தலைவர் இறந்து 34 வருடமாகியும்
latest tamil newsதுாத்துக்குடி உப்பளத் தொழிலாளியான ஜெயச்சந்திரன்,கடந்த 34 வருடங்களாக சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்.,நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.
எம்.ஜி.ஆரின் 34 வது வருட நினைவு தினமான நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏாராளமான பொதுமக்களும்,பிரமுகர்களும்,அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஒரு தலைவர் இறந்து 34 வருடமாகியும் அவரது நினைவுகளை நெஞ்சிலே சுமந்து வாழ்வது மட்டுமல்ல, அவர் நினைவு நாளில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவது என்பதும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமாகத்தான் இருக்கும்.


latest tamil newsஅப்படி நேற்று வந்த அவரது ரசிகர்களில் ஒருவர் நீண்ட நேரம் எம்.ஜி.ஆர்.,சமாதியை சுற்றி வருவதும், தள்ளி நின்று அழுவதும், திரும்பவந்து சமாதியை தொட்டு வணங்குவதுமாக இருந்தார்.
துாத்துக்குடி வேப்பலோடை பகுதியில் வசிக்கிறார், பிறந்தது வளர்ந்தது எல்லாம் துாத்துக்குடிதான், இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது தாயார் முத்தம்மாளுக்கு எம்.ஜி.ஆர்..மீது பாசம் அதிகம் இதன் காரணமாக அவ்வப்போது சென்னை வந்து திநகர் அலுவலக வாசலில் மக்களோடு மக்களாக நின்று எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு சென்றுவிடுவார்.
ஒரு முறை சிறுவனாக இருந்த ஜெயச்சந்திரனையும் அழைத்துக் கொண்டு வந்த போது ராயப்பேட்டை கட்சி அலுவலத்தில் சரியான கூட்டம், முத்தம்மாளையும் ஜெயச்சந்திரனையும் கூட்டம் நெட்டித்தள்ளியது. இதைக்கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர்.,இருவரையும் பாதுகாப்பாக தன்னிடம் வரவழைத்து அன்பொழுக விசாரித்து சாப்பாடு போட்டு பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தார்.


latest tamil newsஅது முதல் ஜெயச்சந்திரனுக்கும் எம்ஜிஆரை மிகவும் பிடித்துப் போனது. அவர் சொன்னார் என்பதற்காக நான் பச்சைகூட குத்திக் கொண்டேன் ஆனால் இன்று வரை நான் கட்சி மன்றம் சார்ந்தவன் இல்லை எம்.ஜி.ஆர்..ரசிகன் அந்த ஒரு தகுதி போதும் என்று கருதுபவன்.
நான் ஒரு உப்பளத் தொழிலாளி.என்னோட சந்தோஷமே எம்.ஜி.ஆர்.,சினிமா பார்ப்பதுதான்.ஒரே படத்தை பல முறை பார்ப்பேன். எம்.ஜி.ஆரை ஆதரித்ததால் நானும் தினமலரை ஆதரிப்பவன், இன்று வரை தினமலர் படிக்காமல் என் பொழுது விடிந்தது இல்லை.
அம்மா இறந்த பிறகு எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க வருவது இல்லை, சினிமாவில் பார்த்துக் கொள்வதோடு சரி. ஒரு நாள் எம்.ஜி.ஆர்..இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு இடிந்து போனேன் துாத்துக்குடியில் அவருக்கு சக ரசிகர்களுடன் சேர்ந்து படம் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
அதற்கு பிறகு அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் முதல் இன்று வரை சென்னை வந்து செல்கிறேன் எத்தனை வருடம் என்றெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது இல்லை டிசம்பர் மாதம் வந்துவிட்டால் போதும் சென்னை பயணத்திற்கு தயராகிவிடுவேன்.ஜானகியம்மா முதல்வராக இருந்த போது ராமாவரம் தோட்டம் சென்று அவரை ஒரு முறை பார்த்தேன், எம்.ஜி.ஆர்.,போலவே சாப்பாடு போட்டு கையில் பணம் கொடுத்து அனுப்பினர். அவரும் இறந்த பிறகு வேறு எந்த தலைவரையும் தேடிப்போய் பார்ப்பது இல்லை.
கடந்த இரண்டு வருடங்களாகத்தான் எம்.ஜி.ஆர்..உதவியாளராக இருந்த மகாலிங்கம் என்னைப்பற்றி கேள்விப்பட்டு வீட்டிற்கு வரவழைத்து சாப்பாடு போட்டு செலவிற்கு பணம் கொடுத்து உதவி வருகிறார்.
எனக்கு எம்.ஜி.ஆர்.,தெய்வம் மாதிரி எனது கோரி்க்கையை அவரிடம் மானசீகமாக தெரிவிப்பேன் அவர் அதை தீர்த்துவைப்பார். திருமணமாகி பத்து வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தது எம்.ஜி.ஆர்.,சமாதியில் முடியிறக்கி வேண்டிக் கொண்டேன், மறுவருடமே மகன் பிறந்தான்.இப்போது அவனுக்கு வயது 25 ஆகிறது டிப்ளமோ முடித்துவிட்டு ரொம்ப வருடமாக வேலை தேடி வருகிறான்,‛ அவனுக்கு ஒரு வழி காட்டணும் தெய்வமே' என்று இந்த வருடம் வேண்டிக்கொண்டுள்ளேன் நிச்சயம் என் தெய்வம் எம்.ஜி.ஆர்.,வழிகாட்டுவார் என்று நம்பிக்கையுடன் காணப்பட்ட ஜெயச்சந்திரனுடன் பேசுவதற்கான எண்:94891 65642.
-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X