லண்டன்: ஒமைக்ரான் தொற்று ஏற்படுவோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் விகிதம் குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் டெல்டாவை விட பாதிப்பு 40 முதல் 45 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் கோவிட் வைரஸின் புதிய மாறுபாடான ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. அதனை உடனடியாக அந்நாடு உலகிற்கு அறிவித்து எச்சரித்தது. அதனால் உலக நாடுகள் விழிப்புடன் கண்காணிப்பில் இறங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளோனார் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அங்கு தொற்று உள்ள குழுவினரிடம் லண்டன் இம்பீரியல் கல்லூரி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியது.

டிசம்பர் 1 முதல் 14 வரை இங்கிலாந்தில் பி.சி.ஆர்., பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களின் தகவல்களை ஆராய்ந்தனர். அதன் மூலம் இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர வேண்டிய நிலை டெல்டாவை விட 40 முதல் 45 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டிருப்பது இதற்கு காரணம் என்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE