கோவிட் நோய் கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்ற முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: கோவிட் தடுப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: கோவிட் நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோவிட் தடுப்பு

சென்னை: கோவிட் தடுப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.



latest tamil news



ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: கோவிட் நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோவிட் தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கோவிட் நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.


latest tamil news



கட்டாயம் முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கடைகள் , வணிக வளாகங்கள், திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-டிச-202109:22:35 IST Report Abuse
முருகன் அரசு கடுமையான கட்டுபாடுளை விதிக்க வேண்டும் . மக்கள் அறிவுரைகளை பின்பற்றுவது இல்லை . இரண்டாம் அலை போன்று மருத்துவமனைகளில் படுக்களை தேடி அலையும் நிலையை ஏற்படுத்தி விடுவார்கள்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-டிச-202103:52:29 IST Report Abuse
BASKAR TETCHANA நீ உண்மையிலே மக்கள் மீது அன்பு இருந்தால் இந்த கோரோனோ ஓமைக்ரோன் வியாதியை கட்டு படுத்து. சும்மா உன் அப்பன் போட்ட வேஷத்தை நீயும் போடாதே. இன்றைய நிலை மிகவும் தமிழகத்தில் மிக மோசம். உன் சுகாதார மந்திரியை நம்பி மோசம் போகாதே. குறைந்தது இன்னும் மரணம் அதிகம் ஆகும். உன் ஆட்சி சும்மாதான் குறைந்தது வரும் காலத்தில் இன்னும் அதிகமாக தான் இருக்கும். விரைவில் நாள் என்ன படுகிறது உன் ஆட்சிக்கு.
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
24-டிச-202123:41:12 IST Report Abuse
John Miller நோய் பரவலை தடுக்க ஒரு வருடத்திற்கு எல்லா கோவில்களையும் முடுதல் அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X